நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்

Updated: 17 January 2019 18:44 IST

1-1 என சமநிலையில் இருக்கும் இந்த தொடரில், நாளை நடக்கும் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும்

India vs Australia: Australia Include Adam Zampa, Billy Stanlake In Playing XI For Third ODI Against India
நாளைய போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது © AFP

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி, நாளை மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாடும் 11 வீரர்களில் பட்டியலை ஆஸ்திரேலியா அணி வெளியிட்டுள்ளது.

சென்ற போட்டியில் விளையாடிய அணியில் இருந்து இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுழல் பந்து வீச்சாளர் நாதன் லயன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு சுழல் பந்து வீச்சாளர் ஆடம் ஷாம்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் ஜெசன் பெக்ரண்டாப் காயம் காரணமாக நாளை நடக்கும் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பில்லி ஸ்டான்லேக் சேர்க்கப்பட்டுள்ளார்.

1-1 என சமநிலையில் இருக்கும் இந்த தொடரில், நாளை நடக்கும் போட்டியில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றும். கோலி, தோனியின் சிறப்பான ஆட்டத்தால் கடந்த போட்டியை வென்ற இந்தியா அணி, நாளைய போட்டியிலும் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணி :

அரோன் பின்ச், அலேக்ஸ் காரி, உஷ்மன் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப், மாக்ஸ்வேல், மார்க்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஷாம்பா, சிடில், ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக்.

 

Comments
ஹைலைட்ஸ்
  • நாதன் லயான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
  • ஆடம் ஷாம்பா அணிக்கு திரும்பியுள்ளார்
  • கடந்த இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட லயான் வீழ்த்தவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு அனுஷ்காவின் ஸ்பெஷல் வாழ்த்து!
இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு அனுஷ்காவின் ஸ்பெஷல் வாழ்த்து!
3வது ஒருநாள் போட்டி: தோனி அபாரம் - 2-1 என்ற கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி! #Highlights
3வது ஒருநாள் போட்டி: தோனி அபாரம் - 2-1 என்ற கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி! #Highlights
நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்
நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்
Advertisement
ss