நான்கு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா!

Updated: 21 November 2018 19:02 IST

இந்த வெற்றி 1-0 என்ற முன்னிலையை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டி வெள்ளியன்று மெல்பெர்னில் நடைபெறவுள்ளது

India vs Australia: India Lose 1st T20I Despite Shikhar Dhawan Heroics
முதல் டி20 போட்டியில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா © AFP

பிரிஸ்பனில் நடந்த டி20 போட்டியில், இந்திய அணியை 4 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. மழை காரணமாக ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் விளையாடி 158 ரன்கள் எடுத்தது. பின்னர், இந்திய அணிக்கு டக்வெர்த் லூயிஸ் முறைப்படி 17 ஓவர்களில் 174 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷிகர் தவான் 76 ரன்கள் எடுத்தும், இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்தது இந்தியா.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் 3 ஓவர்கள் முடிவில் 12 ரன்களை எடுத்தது. பின்னர் பவர்ப்ளேயில் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 38 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

8-வது ஓவரின்போது ஆஸி. பேட்ஸ்மேன் லின் 3 சிக்ஸர்களை பறக்க விட்டார். அடுத்த ஓவரில் ஃபின்ச் 27 ரன்களில் வெளியேற சற்று தடுமாறிய ஆஸ்திரேலிய அணி 10.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்களை எடுத்திருந்தது.

இதன் பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார். 14-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து ஸ்கோரை உயர்த்தினார் மேக்ஸ்வெல். 16.1 ஓர்களில் 153 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது 17 ஓவர்களாக ஆட்டம் குறைத்துக் கொள்ளப்பட்டது.

17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, தவானும், ரோஹித்தும் களமிறங்கி அதிரடி காட்டினர். 7 ரன்னில் ரோஹித் வெளியேற, தவான் மட்டும் 28 பந்துகளில் அரைச்சதத்தை கடந்தார்.

எதிர்பார்க்கப்பட்ட கோலி 8 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பண்டும் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர்.

இதனால் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இருப்பினும் 20 ரன்னில் ரிஷப் பந்த் ஆட்டம் இழந்ததால், அணி மீண்டும் தடுமாறியது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இதில் க்ருனால் பாண்டியாவும், தினேஷ் கார்த்திக்கும் விக்கெட்டை அடுத்தடுத்து பறி கொடுத்ததால், இந்திய அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 20 ஓவர் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்த வெற்றி 1-0 என்ற முன்னிலையை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டி வெள்ளியன்று மெல்பெர்னில் நடைபெறவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
முதலாவது டி20: இந்தியா தோல்வி - சேவாக்கின் நக்கலான ட்விட்!
முதலாவது டி20: இந்தியா தோல்வி - சேவாக்கின் நக்கலான ட்விட்!
நான்கு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா!
நான்கு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா!
Highlights: முதலாவது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா
Highlights: முதலாவது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா
இந்தியா - ஆஸி., 1வது டி20: எங்கு, எப்படி நேரலையில் பார்ப்பது..?
இந்தியா - ஆஸி., 1வது டி20: எங்கு, எப்படி நேரலையில் பார்ப்பது..?
முதலாவது டி20: பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதும் இளம் ஆஸ்திரேலியா!
முதலாவது டி20: பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதும் இளம் ஆஸ்திரேலியா!
Advertisement