Listen to the latest songs, only on JioSaavn.com
 

3வது ஒருநாள் போட்டி: தோனி அபாரம் - 2-1 என்ற கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி! #Highlights

Updated: 22 January 2019 12:54 IST

Live Score India vs Australia 3rd ODI: இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்பெர்னில் நடந்து வருகிறது.

Live Cricket Score, India vs Australia 3rd ODI Highlights: MS Dhoni Special Gives India 1st Bilateral ODI Series Win In Australia
Live Cricket Score, India vs Australia 3rd ODI: ஒருநாள் போட்டியில் 70வது அரைசதத்தை நிறைவு செய்தார் தோனி. © Facebook

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மெல்பெர்னில் நடந்து வருகிறது. டாஸில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. லயன், பெகன்ட்ராஃப் நீக்கப்பட்டு ஸம்பா, ஸ்டான்லேக் சேர்க்கப்பட்டனர். இந்திய தரப்பில் சிராஜ், ராயுடு, குல்தீப் நீக்கப்பட்டு விஜய் சங்கர், கேதர் ஜாதவ், சஹால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்தத் தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடரில் சமநிலையில் உள்ளன. இன்றைய போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

ஒருவேளை இன்றைய போட்டியை இந்தியா வென்றால் ஆஸ்திரேலியாவில் ஒரு சுற்றுப்பயணத்தில் ஒரு தொடரையும் இழக்காத அணியாக நாடு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவர் 1:

இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் தடை பட்டது. ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் எடுத்துள்ளது.

ஓவர் 3:

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் துவக்க வீரர் கேரி 5 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஷ்வர் குமார் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 9:

9 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.கவாஜா 19 பந்தில் 7 ரன் எடுத்து நிதானமாக ஆடி வருகிறார். ஆஸ்திரேலிய கேப்டன் பின் 24 பந்தில் 14 ரன் எடுத்து புவனேஷ்வர் குமார் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஓவர் 15:

15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 31 பந்தில் 15 ரன் எடுத்து நிதானமாக ஆடி வருகிறார். சென்ற போட்டியில் சதமடித்த மார்ஷ் 23 பந்தில் 8 ரன் எடுத்து ஆடி வருகிறார். அறிமுக வீரரான விஜய் சங்கர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

ஓவர் 23:

23 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 50 பந்தில் 34 ரன் எடுத்து நிதானமாக ஆடி வருகிறார். சென்ற போட்டியில் சதமடித்த மார்ஷ் 54 பந்தில் 39 ரன் எடுத்து ஆடி வருகிறார்.

ஓவர் 24

24 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. 24வது ஓவரின் இரண்டாவது பந்தில் மார்ஷை சாஹல் பந்தில் தோனி ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார், அதே ஓவரின் 4வது பந்தில் கவாஜா சாஹல் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் சிறப்பாக ஆடி வந்த இரண்டு பேட்ஸ் மேன்களையும் ஆட்டமிழக்க செய்தார் சாஹல்.

ஓவர் 30:

30 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல் அபாரமாக பந்துவீசி வருகிறார். சாஹல் தனது 4வது ஓவரில் 20 பந்தில் 10 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோனின்ஸை வீழ்த்தினார். ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 35:

35 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்கோம்ப் 30 பந்தில் 24 ரன்களோடு களத்தில் உள்ளார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 19 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 40:

40 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்கோம்ப் 50 பந்தில் 46 ரன்களோடு களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் முடிய இன்னும் 10 ஓவர்களே உள்ள நிலையில் அதிரடியில் களமிறங்காமல் நிதானமாக ஆடி வருகிறது ஆஸ்திரேலியா.

ஓவர் 44:

44 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்கோம்ப் சிறப்பாக அரை சதமடித்து ஆடி வருகிறார். 16 ரன்கள் எடுத்த நிலையில், ரிச்சர்ட்ஸன் சாஹல் பந்தில் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 48:

48 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடி அரை சதமடித்த ஹேண்ட்ஸ்கோம்ப், சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸம்பா சாஹல் அபாரமாக பந்துவீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஓவர் 48.4:

48.4 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 58 ரன்களையும், மார்ஷ் 39 ரன்களையும் குவித்தனர். இந்திய தரப்பில் சாஹல் 6 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸி மண்ணில் இந்திய வீரரின் சிறப்பான பந்துவீச்சாக சாஹலின் பந்துவீச்சு இருந்தது.

இந்தியா இன்னிங்ஸ்:

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட்டத்தை துவங்கியுள்ளது. துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் தவான் களமிறங்கியுள்ளனர்.

ஓவர் 5:

5 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. தவான் மற்றும் ரோஹித் தலா 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

ஓவர் 6: 

6 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்துள்ளது. 9 ரன் எடுத்திருந்த நிலையில் ரோஹித் ஷர்மா சிடில் பந்தில் ஸ்லிப்பில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 10:

10 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 5 ரன்களுடனும் , தவான் 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 205 ரன்கள் தேவை.

ஓவர் 15:

15 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 25 ரன்களுடனும் , தவான் 20 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 177 ரன்கள் தேவை.

ஓவர் 17:

17 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 27 ரன்களுடனும் , தோனி 1 ரன்னுட‌னும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 171 ரன்கள் தேவை . 23 ரன் எடுத்த நிலையில், தவான் ஸ்டோனின்ஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 20:

20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 32 ரன்களுடனும் , தோனி 9 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 30 ஓவரில் 158  ரன்கள் தேவை .

ஓவர் 25:

25 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 36 ரன்களுடனும் , தோனி 25 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற 150 பந்தில் 138  ரன்கள் தேவை.

ஓவர் 30:

30 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 35 ரன்களுடனும் ஆடி வருகிறார். 46 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் கோலி ரிச்சர்ட்ஸன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 120 பந்தில் 118 ரன்கள் தேவை . தோனி - கோலி இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர்.

ஓவர் 35:

35 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 42 ரன்களுடனும் , கேதர் ஜாதவ் 11 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 90 பந்தில் 98 ரன்கள் தேவை.

ஓவர் 38:

38 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 54 ரன்களுடனும் , கேதர் ஜாதவ் 19 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 72 பந்தில் 80 ரன்கள் தேவை.

ஓவர் 40:

40 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 54 ரன்களுடனும் , கேதர் ஜாதவ் 29 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 60 பந்தில் 66 ரன்கள் தேவை.

ஓவர் 45:

45 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 70 ரன்களுடனும் , கேதர் ஜாதவ் 35 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 30 பந்தில் 44 ரன்கள் தேவை.

ஓவர் 46:

46 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 71 ரன்களுடனும் , கேதர் ஜாதவ் 43 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 24 பந்தில் 33 ரன்கள் தேவை.

ஓவர் 47:

47 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 74 ரன்களுடனும் , கேதர் ஜாதவ் 46 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 18 பந்தில் 27 ரன்கள் தேவை.

ஓவர் 48: ஜாதவ் அரைசதம்

48 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 82 ரன்களுடனும் , கேதர் ஜாதவ் 50 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 12 பந்தில் 14 ரன்கள் தேவை.

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா, 49.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய முன்னாள் கேப்டன் தோனி அபாரமாக ஆடி 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேதர் ஜாதவ் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி தரப்பில் ஸ்டோனின்ஸ், ரிச்சர்ட்ஸன், சிடில் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் டி20 தொடரை சமன் செய்து, டெஸ்ட்டை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் முழுமையாக வென்றுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு அனுஷ்காவின் ஸ்பெஷல் வாழ்த்து!
இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு அனுஷ்காவின் ஸ்பெஷல் வாழ்த்து!
3வது ஒருநாள் போட்டி: தோனி அபாரம் - 2-1 என்ற கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி! #Highlights
3வது ஒருநாள் போட்டி: தோனி அபாரம் - 2-1 என்ற கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி! #Highlights
நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்
நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்
Advertisement