அடிலெய்ட் டெஸ்ட்: 10 வருடத்துக்கு பிறகு ஆஸி மண்ணில் இந்தியா அபார வெற்றி!

Updated: 10 December 2018 10:56 IST

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Highlights, India vs Australia 1st Test Day 5: India Beat Australia By 31 Runs, Take 1-0 Series Lead
© AFP

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதாலவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் துவங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் குவித்திருந்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி 72 ரன்கள் குவித்த ட்ராவிஸ் ஹெட் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடி அரைசதமடித்த ஷான் மார்ஷும் 60 ரன்களில் அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் முறையே இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ராஹ் கைப்பற்றினர். கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் தலா 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் பெய்ன் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். இன்னும் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டே தேவை என்ற நிலையில் நாதன் லயனும், ஹேசல்வுட்டும் இந்திய பந்துவீச்சை சோதித்தனர்.

தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஹேசல்வுட் 13 ரன்னில் அஷ்வின் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக ஆஸ்திரேலியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தியா 2008ம் ஆண்டுக்கு பிற‌கு ஆஸ்திரேலியாவில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். நாதன் லயன் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய தரப்பில் அஷ்வின், பும்ராஹ், ஷமி தலா மூன்று விக்கெட்டுகளையும், இஷாந்த் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய விக்கெட் கீப்பர் இரண்டாவது இன்னிங்ஸில் 5 கேட்ச் பிடித்தது மட்டுமின்றி இந்த டெஸ்ட்டில் 11 கேட்களை பிடித்து சர்வதேச அளவில் ஒரே போட்டியில் அதிக கேட்ச்கள் பிடித்தவர் என்ற ரசல், டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: முதல் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கியது இங்கிலாந்து!
உலகக் கோப்பை 2019: முதல் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!! #Scorecard
ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!! #Scorecard
100 கோடி இதயங்கள் உடைந்தன, நியூசி-யிடம் தோற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா!
100 கோடி இதயங்கள் உடைந்தன, நியூசி-யிடம் தோற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து: ஆட்டம் துவங்கியது  #Scorecard
இந்தியா vs நியூசிலாந்து: ஆட்டம் துவங்கியது #Scorecard
ரோகித் அதிரடி சதம்! 7 விக். வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா!!
ரோகித் அதிரடி சதம்! 7 விக். வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா!!
Advertisement