Listen to the latest songs, only on JioSaavn.com
 

மெல்பெர்ன் டெஸ்ட்: டாப் ஆர்டர் சரிந்தது இந்தியா 346 ரன்கள் முன்னிலை!

Updated: 28 December 2018 12:35 IST

உணவு இடைவேளையின போது ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்துள்ளது

Live Cricket Score, India vs Australia 3rd Test Day 3: Australia 6 Down, India In Absolute Control
© Twitter/BCCI

பாக்ஸிங் டே டெஸ்ட்ட்டின் இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. முன்னதாக இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். பின்ச் ஆட்டம் துவஙகிய 5 ஓவரில் இஷாந்த் பந்துவீச்சில் அறிமுக வீரர் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஹாரிஸ் 22 ரன்னுக்கும், கவாஜா 21 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளைக்கு முந்தைய பந்தில் ஷான் மார்ஷ் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

 

உணவு இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா. அதன் பின்னரும் இந்திய பந்திவீச்சை எதிர் கொள்ள சிரமப்பட்டது. டிராவிஸ் ஹெட் 20 ரன்னுக்கும், மிட்செல் மார்ஷ் 9 ரன்னுக்கும், கம்மின்ஸ் 17 ரன்னுக்கும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

தேநீர் இடைவேளையின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா. ஆட்டம் துவங்கியதும் 6 ரன்களை சேர்ப்பதற்குள் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்தது. பும்ராஹ் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்தது. 

பும்ராஹ் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது பும்ராஹ்வின் சிறப்பான டெஸ்ட் பந்துவீச்சாகும். 151 ரன்களுக்கு சுருண்டு ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் ஆனது. ஆனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடரும் என்று கோலி அறிவித்தார். 292 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளது.

292 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா துவக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் இன்னிங்ஸில் டாப் ஸ்கோரர்களான புஜரா மற்றும் கோலி டக் அவுட் ஆகி வெளியேற, விஹாரி  13 ரன்னுக்கும், ரஹானே 1 ரன்னும், ரோஹித் 4 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆட்டநேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் குவித்துள்ளது. இந்திய தரப்பில் மயன்க் அகர்வால் 29 ரன்களுடனும் , ரிஷப் பன்ட் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதுவரை இந்தியா 346 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"வார்னர், ஸ்மித் இருந்திருந்தால் தோற்றிருக்க மாட்டோம்" - ஆஸி கேப்டன் டிம் பெய்ன் வருத்தம்
"வார்னர், ஸ்மித் இருந்திருந்தால் தோற்றிருக்க மாட்டோம்" - ஆஸி கேப்டன் டிம் பெய்ன் வருத்தம்
"தொடரை வெல்வோம்" வரலாற்று வெற்றிக்கு பின் கேப்டன் கோலி!
"தொடரை வெல்வோம்" வரலாற்று வெற்றிக்கு பின் கேப்டன் கோலி!
மெல்பெர்ன் டெஸ்ட்: 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா வரலாற்று வெற்றி!
மெல்பெர்ன் டெஸ்ட்: 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா வரலாற்று வெற்றி!
மெல்பெர்ன் டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா!
மெல்பெர்ன் டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா!
குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலை செய்கிறாயா ரிஷப் பன்ட்டிடம் வம்பிழுத்த பெய்ன்!
''குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலை செய்கிறாயா'' ரிஷப் பன்ட்டிடம் வம்பிழுத்த பெய்ன்!
Advertisement