சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!

Updated: 22 July 2019 11:40 IST

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான ஹீமா தாஸ் சர்வதேச தடகள அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்

Sachin Tendulkar, PM Narendra Modi Congratulate Hima Das For Winning Five Gold Medals In A Month
ஒரு மாதத்திற்குள் ஐந்து தங்கம் வென்று அசத்தினார் ஹீமா தாஸ். © Twitter

ஜூலை 2  ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றிருந்தார் ஹீமா தாஸ். அதனை தொடர்ந்து ஜூலை 7 ஆம் தேதி போலாந்தின் குட்னோ தடகள போட்டியில் 200 மீட்டர் பந்தயத்திலும் தங்கம் வென்றார் ஹீமா.

மேலும் கிளாட்னோவில் நடந்த கிளாட்னோ தடகள போட்டியிலும் 200 மீட்டர்  ஓட்ட பந்தயத்தில் தங்கம், செக் குடியரசில் தபோர் அட்லெட்டிக் மீட் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம், செக் குடியரசு தலைநகரம் பிரெக் (Prague) போட்டியில் 400 மீட்டடில் தங்கம் என ஒரு மாதத்திற்குள் ஐந்து தங்கம் வென்று அசத்தினார் ஹீமா தாஸ்.

ஹீமா தாஸின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி முதல் சச்சின் டெண்டுல்கர் வரை அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

‘ஐரோப்பாவில் நீங்கள் செய்யும் சாதனை எனக்கு பிடித்திருக்கிறது. இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நீங்கள் இருக்கிறீர்கள்' என ஹீமா தாஸுக்கு சச்சின் ட்விட் செய்தார்.

‘ஹீமா தாஸின் சாதனையை எண்ணி அனைவரும் பெருமை கொள்கிறோம். அவருக்கு எனது பாராட்டுகள்' என பிரதமர் ட்விட் செய்தார்.

சர்வதேச தடகள அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஹீமா தாஸை பாராட்டி பலர் ட்விட் செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான ஹீமா தாஸ், 2018 ஜக்காதா ஆசிய போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளி  பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐஏஏஎப் உலக U20 சாம்பியன்ஷிப்பில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஹீமா தாஸ்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஹீமா தாஸை பாராட்டி சச்சின் ட்விட் செய்தார்
  • ஐரோப்பாவில் தடகள போட்டிகளில் விளையாடி வருகிறார் ஹீமா
  • ஜூலை 2 ஆம் தேதி தனது பதக்க வேட்டையை துவங்கிய ஹீமா இன்னும் முடிக்கவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!
சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!
சாதனை மேல் சாதனை படைக்கும் ஹீமா தாஸ்...!
சாதனை மேல் சாதனை படைக்கும் ஹீமா தாஸ்...!
இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...!
இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...!
தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!
தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!
ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்
ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்
Advertisement