
இத்தாலியில் 30வது கோடைகால பல்கலைகழக போட்டிகள் (Summer University Games) நடைபெற்று வருகிறது. இதில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் டுட்டி சந்த்.
இந்த வெற்றிக்கு பின்பு ‘என்னை கீழே தள்ளினால் மீண்டும் எழுவேன்' என ட்விட் செய்துள்ளார் சந்த். கடந்த மே மாதம் தான் ஓர் பாலின உறவில் இருப்பதாக தெரிவித்தார் சந்த். இதற்காக கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார் டுட்டி சந்த்.
Pull me down, I will come back stronger! pic.twitter.com/PHO86ZrExl
— Dutee Chand (@DuteeChand) July 9, 2019
தங்கம் வென்றதிற்கு டுட்டிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒலிம்பிக்கிலும் சாதனை படைக்க வாழ்த்து தெரிவித்தார்.
Congratulations @DuteeChand for winning the 100m sprint at the Universiade, the World University Games, in Naples. This is India's first such gold and a moment of immense pride for our country. Please keep up the effort, and look to greater glory at the Olympics #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 10, 2019
100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தேசிய சாதனையான 11.32 விநாடிகளை தன் வசம் வைத்துள்ள டுட்டி சந்த், இந்த போட்டியில் 100 மீட்டரை 11.24 விநாடியில் கடந்து தங்கம் வென்றார்.
Picked it up! pic.twitter.com/Qwci6Uz5Yr
— Dutee Chand (@DuteeChand) July 9, 2019
ஓர் பாலின உறவை குறித்து சந்த் தெரிவிக்கையில் ‘எல்லாம் ஒன்று இரண்டு மாதங்களில் சரியாகி விடும். அனைவருக்கும் வாழ துணை தேவை. அதே போல் தான் எனக்கும்' என்றார்.
‘பிரச்சனைகள் வந்து செல்லும். எனது குறிக்கோள் 2020 யில் நடக்கும் ஒலிம்பிக் ஆகும். ஒலிம்பிக்கில் பங்கேற்க கடுமையாக பயிற்சி செய்கிறேன்' என்றார் டுட்டி சந்த்.
(With inputs from ANI and IANS)