ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்

Updated: 08 July 2019 15:00 IST

ஆண்கள் பிரிவில் 200 மீட்டர் பந்தயத்தில் 21.18 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார் முகமது அனாஸ்.

Hima Das Wins Second Gold Medal Inside A Week
200 மீட்டர் பந்தயத்தில் தங்கம் வென்றார் ஹீமா தாஸ் © AFP

தடகளத்தில் உலக அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ஹீமா தாஸ். அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான ஹீமா தாஸ், 2018 ஜக்காதா ஆசிய போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளி வென்று அசத்தினார். மேலும் ஐஏஏஎப் உலக U20 சாம்பியன்ஷிப்பில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஹீமா தாஸ்.

இந்நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளார் ஹீமா தாஸ். போலாந்தில் நடக்கும் குட்னோ தடகள போட்டிகளில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார் ஹீமா. 200 மீட்டர் தூரத்தை 23.97 நொடிகளில் கடந்தார் ஹீமா தாஸ். 24.06 நொடிகளில் 200 மீட்டரை கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றார் விகே விஷ்மையா.

இந்த ஆண்டு சர்வதேச 200 மீ பிரிவில் ஹீமா வெல்லும் இரண்டாவது தங்கம் இதுவாகும். ஏற்கனவே செவ்வாய் அன்று நடந்த போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸில் ஹீமா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் இரண்டு சர்வதேச போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் ஹீமா தாஸ்.

ஆண்கள் பிரிவில் 200 மீட்டர் பந்தயத்தில் 21.18 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார் முகமது அனாஸ்.

பெண்கள் 400 மீட்டர் பந்தயத்திலும் இந்திய பெண்களே ஆதிக்கம் செலுத்தினர். பி சரிதாபென் (52.77), சோனியா பைஷ்யா (53.73), ஆர் வித்யா (53.73) பதக்கம் வென்றனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • உலக அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ஹீமா தாஸ்
  • U20 சாம்பியன்ஷிப்பில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஹீமா தாஸ்
  • சர்வதேச 200 மீ பிரிவில் ஹீமா வெல்லும் இரண்டாவது தங்கம் இதுவாகும்.
தொடர்புடைய கட்டுரைகள்
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்கு ஓடி முடித்த கென்ய வீரர்!!
வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்கு ஓடி முடித்த கென்ய வீரர்!!
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்
போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு  4 ஆண்டுகள் தடை!
போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு 4 ஆண்டுகள் தடை!
World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி
World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி
Advertisement