உலக ஜூனியர் தடகளப் போட்டி: முதன்முறையாக தங்கம் வென்ற இந்தியா!

Updated: 13 July 2018 10:17 IST

இந்தியாவைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், உலக ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்

Hima Das Scripts History, Becomes First Indian Woman To Win Gold In World Junior Athletics
© AFP

இந்தியாவைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், உலக ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். உலக ஜூனியர் தடகளப் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் ஹிமா தாஸ் ஆவார்.

20 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘ஐஏஏஃஎப் வேர்ல்டு அண்டர் 20’ தடகளப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடினார் வீராங்களை ஹிமா தாஸ். 400 மீட்டர் பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஹிமா தாஸ், 51.46 நொடிகளில் ஓட்டத்தை முதலாவது ஆளாக முடித்தார். இதன் மூலம் அவர் தங்கம் வென்றுள்ளார். 

இதுவரை இந்திய வரலாற்றிலேயே உலக ஜூனியர் தடகளப் போட்டிகளில் ஒருவர் கூட தங்கம் வென்றதில்லை. 2002 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரு இந்தியர்கள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இந்நிலையில், முதன்முறையாக தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் தாஸ்.

ஹிமா தாஸுக்கு தற்போது 18 வயது ஆகிறது. சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியின் போதும் 400 மீட்டர் பந்தய தூரத்தை 51.32 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார் ஹிமா. அப்போதிலிருந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு, தற்போது உலக அளவில் நடந்தப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்த வீரமங்கை.
 

Comments
ஹைலைட்ஸ்
  • 400 மீட்டர் இறுதிப் போட்டிக்கு மாஸாக தகுதி பெற்றார் ஹிமா தாஸ்
  • 51.46 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார் ஹிமா
  • அவர் காமன்வெல்த் போட்டியிலும் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது
தொடர்புடைய கட்டுரைகள்
சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!
சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!
சாதனை மேல் சாதனை படைக்கும் ஹீமா தாஸ்...!
சாதனை மேல் சாதனை படைக்கும் ஹீமா தாஸ்...!
இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...!
இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...!
தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!
தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!
ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்
ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்
Advertisement