இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...!

Updated: 15 July 2019 11:41 IST

ஐஏஏஎப் உலக U20 சாம்பியன்ஷிப்பில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஹீமா தாஸ்.

Hima Das Wins 3rd International Gold Within Two Weeks
23.45 வினாடியில் 200 மீட்டரை கடந்தார் ஹீமா தாஸ். © AFP

கடந்த சனிக்கிழமை கிளாட்னோவில் நடந்தது கிளாட்னோ தடகள போட்டிகள். அதில் இந்தியாவின் தடகள வீராங்கனையான ஹீமா தாஸ் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார்.  

கடந்த இரண்டு வாரங்களில் ஹீமா தாஸ் வெல்லும் மூன்றாவது சர்வதேச தங்கம் இதுவாகும். ஜூலை 7 ஆம் தேதி போலாந்தின் குட்னோ தடகள போட்டியில் 200 மீட்டர் பந்தயத்தில் தங்கமும் ஜூலை 2 ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

23.45 வினாடியில் 200 மீட்டரை கடந்தார் ஹீமா தாஸ். அதே நேரம் ஆண்கள் 400 மீட்டர் பந்தயத்தை 45.21 வினாடியில் கடந்து தங்க பதக்கமும் புது தேசிய சாதனையையும் படைத்தார் முகமது அனாஸ்.

குட்னோ தடகள போட்டிகளில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை 23.97 நொடிகளில் கடந்து தங்கம் வென்றிருந்தார் ஹீமா தாஸ். அதே போட்டியில் 24.06 நொடிகளில் 200 மீட்டரை கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றார் விகே விஷ்மையா.

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான ஹீமா தாஸ், 2018 ஜக்காதா ஆசிய போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளி  பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐஏஏஎப் உலக U20 சாம்பியன்ஷிப்பில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஹீமா தாஸ்.

(With IANS inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • ஜூலை 7 ஆம் தேதி போலாந்தின் குட்னோ தடகள போட்டியில் தங்கம் வென்றார்
  • ஜூலை 2 ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார
  • அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் 19 வயதான ஹீமா தாஸ்
தொடர்புடைய கட்டுரைகள்
வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்கு ஓடி முடித்த கென்ய வீரர்!!
வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்கு ஓடி முடித்த கென்ய வீரர்!!
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்
போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு  4 ஆண்டுகள் தடை!
போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு 4 ஆண்டுகள் தடை!
World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி
World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி
சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!
சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!
Advertisement