சாதனை மேல் சாதனை படைக்கும் ஹீமா தாஸ்...!

Updated: 19 July 2019 11:44 IST

ஐரோப்பாவில் ஜூலை 2 ஆம் தேதி முதல் போட்டிகளில் பங்கேற்கும் வரும் ஹீமா தாஸ் வெல்லும் நான்காவது தங்கம் இதுவாகும்.

Hima Das Sprints To 4th Gold In 15 Days
23.25 விநாடியில் 200 மீட்டரை கடந்து அசத்தினார் ஹீமா தாஸ். © AFP

சர்வதேச தடகள அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ஹீமா தாஸ். அசாமை சேர்ந்த ஹீமா தாஸ் கடந்த 15 நாட்களில் தனது 4வது தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

செக் குடியரசில் தபோர் அட்லெட்டிக் மீட் நடைபெற்றது. அதில் தான் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றார் ஹீமா தாஸ். புதன் அன்று நடந்த இந்த போட்டியில் 23.25 விநாடியில் 200 மீட்டரை கடந்து அசத்தினார் ஹீமா தாஸ். விகே விஷ்மயா 23.43 விநாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

ஆண்களின் 400 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தேசிய சாதனையாளரான முகமது அனாஸ் 45.40 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார். அவ்ர் ஏற்கனவே ஜூலை 13 ஆம் தேதி நடந்த போட்டியிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் ஜூலை 2 ஆம் தேதி முதல் போட்டிகளில் பங்கேற்கும் வரும் ஹீமா தாஸ் வெல்லும் நான்காவது தங்கம் இதுவாகும்.

ஜூலை 2  ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றிருந்தார் ஹீமா தாஸ். ஜூலை 7 ஆம் தேதி போலாந்தின் குட்னோ தடகள போட்டியில் 200 மீட்டர் பந்தயத்திலும் தங்கம் வென்றார் ஹீமா. மேலும் கிளாட்னோவில் நடந்த கிளாட்னோ தடகள போட்டியிலும் 200 மீட்டர்  ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார் ஹீமா தாஸ்.

Comments
ஹைலைட்ஸ்
  • முகமது அனாஸ் 45.40 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார்
  • விகே விஷ்மயா 23.43 விநாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளி பதக்கம் வென்றார
  • கடந்த 15 நாட்களில் தனது 4வது தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்தார் ஹீமா
தொடர்புடைய கட்டுரைகள்
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்கு ஓடி முடித்த கென்ய வீரர்!!
வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்கு ஓடி முடித்த கென்ய வீரர்!!
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்
போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு  4 ஆண்டுகள் தடை!
போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு 4 ஆண்டுகள் தடை!
World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி
World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி
Advertisement