ஆசிய போட்டிகள்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி சிந்து!

Updated: 28 August 2018 19:36 IST

10வது நாளான இன்று பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைப்பெற்றது

2018 Asian Games PV Sindhu vs Tai Tzu Ying Badminton Final Highlights: PV Sindhu Gets Asiad Silver, Loses Final To World No.1 Tai Tzu Ying
© AFP

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 10வது நாளான இன்று பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைப்பெற்றது.

இதில், இந்தியாவின் பி.வி சிந்து - டாய் சுயிங் ஆகியோர் மோதினர். உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டாய் சுயிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய போட்டியில், சுயிங்கின் அதிரடி ஆட்டத்தை எதிர் நோக்க முடியாமல் சிந்து திணறினார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், 13-21, 16-21 என்ற செட் கணக்கில் டாய் சுயிங் வெற்றி பெற்றார்.

இதன் மூலம், பி.வி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த ஆண்டு நடைப்பெற்ற கோப்பை தொடர்களில், ஐந்து முறை இறுதி போட்டிக்கு சிந்து தகுதி பெற்றுள்ளார். எனினும், ஐந்து முறையும் கோப்பையை கைப்பற்ற தவறி, இரண்டாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
Advertisement