ஆசிய போட்டிகள் 2018: லியாண்டர் பயஸ் விலகல்!

Updated: 17 August 2018 10:57 IST

மூத்த டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், ஆசிய போட்டிகள் 2018-லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

Leander Paes Pulls Out Of Asian Games 2018
© AFP

மூத்த டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், ஆசிய போட்டிகள் 2018-லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனக்கு, ‘ஸ்பெஷலிஸ்ட்’ இரட்டையர் ஜோடி கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

அட்லான்டிக் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவரான பயஸ், சுமித் நாகலுடன் ஜோடி சேர்ந்து ஆடுமாறு தெரிவிக்கப்பட்டார். திவிஜ் ஷரன் மற்றும் ரோகன் போப்பனா, இரட்டையர் பிரிவுக்கு ஜோடி சேர்ந்ததனர். இதனால் பயஸ், சுமித்துடனோ ராம்குமார் ராமநாதனுடனோ ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டது.  

இதையடுத்து பயஸ், ‘மிகவும் கனத்த மனதுடன் ஆசிய போட்டிகள் 2018-லிருந்து நான் விலகுகிறேன். நான் பல வாரங்களுக்கு முன்னரே ஸ்பெஷலிஸ்ட் டபுள்ஸ் பார்ட்னருக்குக் கோரிக்கை வைத்திருந்தேன். திரும்ப திரும்ப நான் கேட்ட பின்னரும் அது நடக்கவில்லை. ராம்குமார் ராமநாதன் ஒரு மிகச் சிறந்த வீரர். அவருடன் இரட்டையர் பிரிவில் நான் விளையாட ஆவலாக இருக்கிறேன். ஆனால், ஒற்றையர் பிரிவில் அவர் பதக்கம் வெல்ல பொன்னான வாய்ப்பு உள்ளது. அதிலிருந்து அவரை நான் திசை திருப்ப விரும்பவில்லை. நமது நாட்டின் இரட்டையர் பிரிவு ஸ்பெஷலிஸ்டுகளான ஸ்ரீராம் பாலாஜி, விஷ்ணுவர்தன், புரவ் ராஜன் மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் போன்றவர்கள் இந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆசிய போட்டிகள் தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்தால் அணிக்கு வலு சேர்த்திருப்பர்’ என்றவர்,

தொடர்ந்து, ‘நான் தொடரில் பங்கேற்காமல் இருப்பது, மற்ற வீரர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக இருக்கும். டென்னிஸ் அணியின் கேப்டன் ஜீஷன் அலியுடன் நான் தொடர்பில் இருந்தேன். போப்பன்னாவின் காயம் குறித்து அவரிடம் கேட்டறிந்தேன். அவர் உடல்நலம் பெற்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இதனால், இந்தியாவுக்கு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் உறுதியாகியுள்ளது’ என்று விளக்கம் தெரிவித்துள்ளார்

Comments
ஹைலைட்ஸ்
  • ஆசிய போட்டிகளில் பயஸ், இதுவரை 8 பதக்கங்கள் வென்றுள்ளார்
  • நான் இந்த முறை ஆசிய போட்டிகளில் விளையாடமாட்டேன், பயஸ்
  • பயஸ், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement