தங்க மகள் ஸ்வப்னாவின் வெற்றியால் விழாக்கோலம் பூண்ட ஜல்பாய்குரி நகரம்!

Updated: 30 August 2018 13:51 IST

ஹெப்டதலான் போட்டியில், ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை ஸ்வப்னாவை அடையும்

Asian Games 2018: Jalpaiguri Celebrates As Swapna Barman, Daughter Of Rickshaw-Puller, Scripts Asiad History

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 11வது நாளான நேற்று, பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

21வயதான ஸ்வப்னா பர்மன், மொத்தம் 6026 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தார். இதன் மூலம், ஆசிய விளையாட்டில், ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இரண்டு கால்களிலும் 6 விரல்கள் கொண்டுள்ள ஸ்வப்னா, சிறப்பு காலணிகள் அணியாமல் போட்டியில் பங்கேற்றுள்ளார். சிறப்பு காலணிகள் வாங்குவதற்கு போதுமான வசதியின்றி ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்துள்ளார். வலியையும் பொருட்படுத்தாது, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஸ்வப்னா போராடி வென்றுள்ளார்.

மேற்கு வங்கால மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்வப்னா, பின் தங்கிய குடும்பப் பின்னனி கொண்டவர். ஸ்வப்னாவின் தந்தை பஞ்சனன் பர்மன், ரிக்‌ஷா ஓட்டனராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாக, உடல் நலத்தில் ஏற்பட்ட பின்னடைவால் ஸ்வப்னாவின் தந்தை படுக்கையில் உள்ளார்.

“நான்காவது வகுப்பு படிக்கும் போதே, ஸ்வப்னாவிடம் இருந்த திறமை வெளிப்பட்டது. 2006-2013 ஆம் ஆண்டு வரை ஸ்வப்னாவிற்கு நான் பயிற்சி அளித்தேன். அவள், மிகவும் மன உறுதி கொண்ட போட்டியாளர். ஆசிய போட்டியில் தங்கம் வென்றது நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று ஸ்வப்னாவின் முன்னாள் பயிற்சியாளர் சுகந்தா தெரிவித்துள்ளார்.

ஆசிய போட்டியில், ஸ்வப்னா தங்கம் வென்ற செய்தி அறிந்தவுடனே ஜல்பாய்குரி நகரமே விழாக்கோலம் பூண்டது. ஊர் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஆனால், ஸ்வப்னாவின் தாயார் பசோனா, கோவிலில் இருந்து வெளியே வரவில்லை.

போட்டி தினத்தன்று, மதியம் முதலே கோவிலில் பிரார்த்தனை செய்து வரும் பசோனா, அவரது மகள் தங்கம் வென்றது குறித்து மிகுந்த பெருமையுடன் காணப்பட்டார். கண்ணீர் கலந்த மகிழ்ச்சியில் ஸ்வப்னாவின் தாயார் தொடர்ந்து கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்.

ஹெப்டத்லான் விளையாட்டு, 100 மீ தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 200மீ, 800மீ பந்தயம் ஆகியவை சேர்த்து இரண்டு நாட்கள் நடைப்பெறும் போட்டி ஆகும்.

கடினமான ஹெப்டதலான் போட்டியில், ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை ஸ்வப்னாவை அடையும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!
சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!
சாதனை மேல் சாதனை படைக்கும் ஹீமா தாஸ்...!
சாதனை மேல் சாதனை படைக்கும் ஹீமா தாஸ்...!
இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...!
இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...!
தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!
தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!
ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்
ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்
Advertisement