
© PTI
18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 14வது நாளான இன்று, ஆண்களுக்கான 49 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டை இறுதி போட்டி நடைப்பெற்றது
இந்த போட்டியில், இந்தியாவின் அமித் பங்கல், உஸ்பெக்கிஸ்தானின் ஹசன்பாய் தஸ்மடோவ் ஆகியோர் மோதினார். ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாயை எதிர்கொண்ட அமித், போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
இறுதியில், 2-3 என்ற போட்டி கணக்கில் இந்தியாவின் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம், இந்தியாவிற்கு 14வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்க பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் இந்தியா, 14 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை கைப்ப்பற்றியுள்ளது
Comments