ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

Updated: 30 August 2018 20:47 IST

பதக்க பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

Asian Games 2018: Women
© PTI

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 12வது நாளான இன்று, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் முதல் இடம் பெற்றுள்ளார். 3.44.72 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்த ஜின்சன், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மற்றொரு இந்திய வீரரான மஞ்சித் சிங், 3.46.57 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்த 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

அதைப் போன்று, பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவின் சித்ரா உன்னிகிருஷ்ணன், மூன்றாம் இடம் பிடித்தார். 4.12.56 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம், 12வது தங்கப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதனால், பதக்க பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 12 தங்கம், 20 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 57 பதக்கங்கள் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement