ஆசிய போட்டிகள் இரட்டையர் டென்னிஸில், இந்தியா தங்கம் வென்றது

Updated: 24 August 2018 17:01 IST

ஆண்கள் இரட்டையர் லைட் வெயிட் பிரிவில் இந்திய வீரர்கள் ரோஹித் குமார், பக்வான் சிங் இணை வெண்கலப்பதக்கம் வென்றது

2018 Asian Games Live Updates Day 6: Rowers Add 1 Gold, 2 Bronze Medals To Indias Tally

ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் இணை தங்கம் வென்றது. கசகஸ்தான் அணியுடனான இறுதி போட்டியில் 6-3, 6-4 என்ற செட்களில் எளிதாக வென்றனர். 

10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார். 

முன்னதாக ஆசிய போட்டிகளின் ஆறாவது நாளான இன்று தங்கம் வென்றதுடன் சிறப்பான தொடக்கத்தை தந்திருக்கிறார்கள் இந்திய வீரர்கள். படகு போட்டியில் இந்திய வீரர்கள் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். லைட் வெயிட் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் துஷ்யந்த் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். கடந்த ஆசிய போட்டிகளிலும் இவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆண்கள் இரட்டையர் லைட் வெயிட் பிரிவில் இந்திய வீரர்கள் ரோஹித் குமார், பக்வான் சிங் இணை வெண்கலப்பதக்கம் வென்றது. மற்றொரு போட்டியில் சவர்ன் சிங், தத்து போகர்னால், ஓம் பிரகாஷ், சுக் மீத் சிங் ஆகிய வீரர்கள் இணைந்து போட்டியிட்ட லைட் வெயிட் நான்கு பேர் கொண்ட படகு போட்டியில் வென்று, தங்கத்தை தட்டிச் சென்றனர்.


11.55  - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுத போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார்.

11. 40 - ஆண்கள் இரட்டையர் டென்னிஸில் ரோஹன் போபண்ணா, திவிஜ் சரண் இணை தங்கம் வென்றது.

11.20 - கைப்பந்து குரூப் சுற்று போட்டியில் 27-28 என்ற கோல் கணக்கில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

11.00- ஃபென்சிங் போட்டியில் இந்திய அணி சீன அணியிடம் காலிறுதியில் தோல்வியடைந்தது.
 

 

18

10.00am - துடுப்பு படகு போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் துஷ்யந்த், பதக்கம் வழங்கும் போது உடல நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவ உதவிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

9.50am - அம்பு எய்தல், இந்திய கலப்பு அணி ஈராக் அணியை 147 -155 என்ற கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.

18

9.40am - 300 மீட்டர் ஆண்கள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஹர்ஜிந்தர் சிங் நான்காம் இடமும், அமித் குமார் ஐந்தாம் இடமும் பிடித்தனர்.

18

9.25am - 8 பேர் பங்கேற்கும் லைட்வெயிட் படகுப் போட்டியில் இந்திய அணி நான்காம் இடம் பிடித்தது. இந்தோனேஷியா, உஸ்பெக்கிஸ்தான்ம் மற்றும் ஹாங்காங் அணிகள் முறையே முதல் மூன்று இடத்தை பிடித்தன.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைய இந்தியா தீவிரம்!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைய இந்தியா தீவிரம்!
Womens T20 WC:18 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது இந்தியா!
Women's T20 WC:18 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது இந்தியா!
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
New Zealand vs India: 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்டது இந்தியா!
New Zealand vs India: 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்டது இந்தியா!
Advertisement