ஆசிய போட்டிகள் 2018: இந்தியாவின் முதல் தங்கத்தை வென்ற பஜ்ரங் புனியா!

Updated: 20 August 2018 10:36 IST

இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வென்றுள்ளார்

Asian Games 2018: Bajrang Punia Wins Gold In Men

ஆசிய போட்டிகள் 2018, விளையாட்டுகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வென்றுள்ளார்.

நல்ல ஃபார்மில் இருக்கும் புனியா, 65 கிலோவுக்கான இறுதிப் போட்டியில் ஜப்பானின் டகடானி டைச்சியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையில் கடைசி வரையில் கடுமையான போட்டி நடைபெற்ற நிலையில் 11-8 என்ற புள்ளி கணக்கில் புனியா, டைச்சியைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதுதான் புனியா விளையாடும் முதல் ஆசிய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 24 வயதாகும் புனியா, காமன்வெல்த் போட்டியின் போதும் பதக்கம் வென்றிருந்தார்.

டைச்சியுடனான போட்டியில், முதல் 6 புள்ளிகளை மளமளவென எடுத்தார் புனியா. ஆனால் டைச்சி, தொடர்ந்து புள்ளிகள் எடுத்து, புனியாவுக்கு ஈடு கொடுத்தார். இதனால், ஆட்டம் கடைசி வரை பரபரப்பாகவே சென்றது. ஆனால், தனது சிறப்பான ஆட்டத்தால் புனியா, டைச்சியை வீழ்த்தினார்.

புனியாவின் வெற்றி இந்தியர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்திருந்தாலும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், ஆரம்ப சுற்றிலேயே தோற்று வெளியேறியது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இது குறித்து சுஷில், ‘இந்தத் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. நான், ஆசிய போட்டிகளுக்கு முன்னர் பெரிய டோர்னமன்ட்களில் விளையாடவில்லை. அதுதான் என் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. ஆனால், இதுவும் விளையாட்டின் ஒரு பகுதிதான். நான் இன்னும் கடுமையாக பயிற்சி எடுத்து, மீண்டு வருவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
'பேக் டு பேக்' தங்கம் வென்று அசத்தும் வினேஷ் பகோத்...!
ஆசிய விளையாட்டு போட்டி 2018: மல்யுத்தத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!
ஆசிய விளையாட்டு போட்டி 2018: மல்யுத்தத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!
ஆசிய போட்டிகள் 2018: இந்தியாவின் முதல் தங்கத்தை வென்ற பஜ்ரங் புனியா!
ஆசிய போட்டிகள் 2018: இந்தியாவின் முதல் தங்கத்தை வென்ற பஜ்ரங் புனியா!
ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்க வேட்டையாடிய இந்திய வீரர்கள்!
ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்க வேட்டையாடிய இந்திய வீரர்கள்!
காமல்வெல்த்தில் தங்கத்தை தவறவிட்ட ‘ஒலிம்பிக்’ தங்க மங்கை
காமல்வெல்த்தில் தங்கத்தை தவறவிட்ட ‘ஒலிம்பிக்’ தங்க மங்கை
Advertisement