ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?

Updated: 25 August 2018 14:00 IST

பரபரப்பாக நடைப்பெற்ற இறுதி போட்டியில், 27-24 என்ற புள்ளி கணக்கில் ஈரான் வென்றது

Asian Games 2018: The Insider Who Plotted India
© AFP

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகிறது. பெண்களுக்கான கபடி போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி ஈரான் அணி தங்கப்பதக்கம் வென்றது. இதனால், இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது

பரபரப்பாக நடைப்பெற்ற இறுதி போட்டியில், 27-24 என்ற புள்ளி கணக்கில் ஈரான் வென்றது. ஈரானின் வெற்றிக்கு பின்னால் ஒரு இந்தியரின் பங்குள்ளது. 30 ஆண்டுகளாக கபடி பயிற்சியாளராக பணியாற்றிய ஷைலஜா ஜெயின், ஈரானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து வந்துள்ளார். சிறந்த பயிற்சியாளராக இருந்த போதும், இந்திய கபடி அணிக்கு பயிற்சிக்கு அளிக்கும் வாய்ப்பு கிடைக்காததால், ஈரான் அணிக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்ததை தக்க வைத்து கொண்டார் ஷைலஜா.

65 வயதான ஹாக்கி பயிற்சியாளர் ஷைலஜா, ஈரான் பெண்கள் கபடி அணிக்கு தீவிர பயிற்சிகள் கொடுத்துள்ளார். பயிற்சி அளிக்க மொழி தடையாக இருக்க கூடாது என்பதால், பாரசீக மொழியை கற்றுக் கொண்டுள்ளார் ஷைலஜா.

“42 பெண்களுடன் தொடங்கிய கபடி குழு, தற்போது 12 சிறந்த போட்டியாளர்களுடன் களத்தில் உள்ளது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார் பயிற்சியாளர் ஷைலஜா

“இந்திய அணி தோற்றது வருத்தமளிக்கிறது. என்னுடைய தாய்நாடு மீது மிகுந்த அன்பு உள்ளது. எனினும், நான் பயிற்சியளிக்கும் அணி வெற்ற பெற வேண்டும் என்ற எண்ணம் அதை மறைத்துவிட்டது” என்றார் நெகிழ்ச்சியாக.

இதைப்போன்று, ஆண்களுக்கான அரை இறுதி கபடி போட்டியில், 26-16 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை ஈரான் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு!
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி கேப்டன் அனுப் குமார் ஓய்வு!
ப்ரோ கபடி லீக்கில் முதல் முறையாக தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!
ப்ரோ கபடி லீக்கில் முதல் முறையாக தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!
ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?
ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?
கபடி மாஸ்டர்ஸ் 2018: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
கபடி மாஸ்டர்ஸ் 2018: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
கபடி மாஸ்டர்ஸ் 2018: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
கபடி மாஸ்டர்ஸ் 2018: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
Advertisement