ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்

Updated: 02 September 2018 12:14 IST

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய போட்டிகள் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது இந்திய மகளிர் ஹாக்கி அணி

Asian Games 2018: Rani Rampal Named India

ஆசிய போட்டிகளின் நிறைவு விழாவில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக இந்திய அணியை வழநடத்திச் சென்ற இவர் இருபதாண்டுகள் கழித்து இந்திய மகளிர் ஹாக்கி அணியை இறுதிப்போட்டி வரை இட்டுச் சென்றார். இறுதிப்போட்டியில் ஜப்பானிடம் தோல்வியடைந்த இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இத்தொடரில் ராணி ராம்பால் மூன்று கோல்கள் அடித்துள்ளார்.

ஆசிய போட்டிகளில் இம்முறை மொத்தம் 69 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. இவற்றுள் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். 2010 ஆம் ஆண்டு குவாங்சு நகரில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 65 பதக்கங்கள் பெற்றதே இந்தியாவின் முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது அதைக்காட்டிலும் கூடுதல் பதக்கங்களை இந்திய அணியினர் வென்றுள்ளனர்.

14 ஆம் நாள் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இந்திய அணி ஆசிய போட்டிகளை அசத்தலாக நிறைவு செய்தது. புதுமுகக் குத்துச்சண்டை வீரரான அமித் பங்கால் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் ஹசன்பாய் தஸ்மதோவை இறுதிப்போட்டியில் வெற்றிகொண்டார். புதிதாக சேர்க்கப்பட்ட ப்ரிட்ஜ் ஆட்டத்திலும் இந்திய அணி தங்கம் வென்றது.

தங்கம் வெல்லும் என்று ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரை இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 6-7 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வியுற்றது. எனினும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது.

மேலும் 14 ஆம் நாள் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணியும் வலுவான மலேசியாவை அரை இறுதியில் வெற்றிபெற்று வெள்ளி வென்றது. இறுதிப்போட்டியில் ஹாங்காங்கிடம் 0-2 என்ற கணக்கில் அவர்கள் தோல்வி அடைந்தனர்.

18வது ஆசியப் போட்டிகளின் தொடக்கவிழாவில் ஈட்டி எறிதல் விரர் நீரஜ் சோப்ரா இந்தியக் கொடியை ஏந்திச் சென்றார். அவர் 88.06 மீட்டர்கள் எறிந்து தங்கப்பதக்கத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 1982 புது டெல்லியில் நடந்த ஆசிய போட்டிகளில் குர்தேஜ் சிங் பெற்ற வெண்கலத்தை அடுத்து ஈட்டி எறிதலில் இந்திய அணி பெறும் இரண்டாவது பதக்கம் இதுவே ஆகும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement