ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!

Updated: 30 August 2018 21:17 IST

இதன் மூலம், 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில், இந்தியா 8வது இடத்தில் உள்ளது

Asian Games 2018 Medal Tally Day 12: Women
© AFP

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 12வது நாளான இன்று, 4x100 தொடர் ஓட்டப்பந்தயம் நடைப்பெற்றது

பெண்களுக்கான 4x100 தொடர் ஓட்டப்பந்தய போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி முதல் இடம் பிடித்தது. ஹீமா தாஸ், பூவம்மா ராஜூ, லக்‌ஷ்மன் பாய், விஸ்மையா ஆகியோர் கொண்ட குழு 3.28.72 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் பெற்றது.

இதைப் போன்று, ஆண்களுக்கான 4x100 தொடர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்தது. குன்ஹூ முகமத், தருண் அய்யாசாமி, முகமது அனாஸ், ஆரோக்கியராஜிவ் ஆகியோர் கொண்ட குழு, 3.01.85 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

இதன் மூலம், 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பதக்க பட்டியலில், இந்தியா 8வது இடத்தில் உள்ளது
 
Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement