ஆசிய விளையாட்டு 2018: 17-0 என்று இந்தோனேஷியாவை சுருக்கியது இந்திய ஹாக்கி அணி

Updated: 21 August 2018 10:56 IST

இரண்டாவது நாளான இன்று, இந்தியா - இந்தோனேஷியா இடையே க்ரூப் ‘ஏ’விற்கான ஆண்கள் ஹாக்கி தொடக்க போட்டி நடைப்பெற்றது

Asian Games 2018, Day 2 Highlights: Wrestler Vinesh Phogat Wins India
© Facebook

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று, இந்தியா - இந்தோனேஷியா இடையே க்ரூப் ‘ஏ’விற்கான ஆண்கள் ஹாக்கி தொடக்க போட்டி நடைப்பெற்றது. 

போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய ஹாக்கி அணியினர், கோல் மழை பொழிந்துள்ளனர். இந்திய அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தால், போட்டியின் முடிவு வரை இந்தோனேஷியா அணி ஒரு கோலும் அடிக்கவில்லை

போட்டி நேர முடிவில் 17-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, தில்ப்ரீத், சிம்ரன்ஜீத், மந்தீப் சிங் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்துள்ளனர். ரூபிந்தர், ஆகாஷ்தீப் ஆகியோர் தலா இரண்டு கோல்களும்,  சுனில், ஹர்மன்ப்ரீத், அமித், விவேக் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்துள்ளனர்.

அதிரடியாக விளையாடிய இந்திய அணி, சொந்த மன்னில் இந்தோனேஷியாவை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம், 2018 ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டிகளில் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. அடுத்து நடக்க இருக்கும் தகுதி சுற்று ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. 

எனினும், இன்றைய வெற்றி, இந்திய ஹாக்கி அணிக்கான முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement