ஆசிய விளையாட்டு போட்டியில் லியாண்டர் பயஸ் பங்கேற்பதில் குழப்பம்!

Updated: 16 August 2018 18:09 IST

ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி தொடங்க இருக்கும் 18வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் நடைப்பெற உள்ளது

Asian Games 2018: Leander Paes

வரும் ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி தொடங்க இருக்கும் 18வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் நடைப்பெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, ஜீஷன் அலி தலைமையிலான இந்திய டென்னிஸ் குழுவினர், இந்தோனேஷியா சென்றுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் அல்லது சுமித் நகல் ஆகியோருடன் இணைந்து லியாண்டர் பயஸ் விளையாட உள்ளார். இந்நிலையில், முன்னனி வீரர் லியாண்டர் பயஸ் இந்திய அணியினருடன் இந்தோனேஷியா செல்லவில்லை என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

“லியாண்டர் பயஸ் இந்தோனேஷியா வருவது குறித்து எந்த தகவல்களும் இல்லை. சின்சினாட்டி தொடரை முடித்துவிட்டு ஆசிய விளையாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தார். ஆனால், சின்சினாட்டியில் பயஸ் பங்கேற்கவில்லை” என்று பயிற்சியாளர் ஜீஷன் அலி தெரிவித்துள்ளார்.

18 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான பயஸ், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், 5 தங்கப் பதக்கங்கள் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக பயஸ் எப்போது இந்தோனேஷியா வருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், இந்த ஆண்டு நடைப்பெற இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில், டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபன்னா, திவிஜ் ஷரண் ஆகியோர் இணைந்து விளையாட உள்ளனர்.

பெண்கள் அணியை பொறுத்தவரை, அன்கித்தா ராய்னா, கர்மன் கவுர் தாண்டி, பிரார்தனா தொம்பாரே ஆகியோர் இந்தியா சார்பில் களம் இறங்க உள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டேவிஸ் கோப்பையில் பயஸின் இழப்பு இந்தியாவுக்கு பாதிப்பில்லை - மகேஷ் பூபதி
டேவிஸ் கோப்பையில் பயஸின் இழப்பு இந்தியாவுக்கு பாதிப்பில்லை - மகேஷ் பூபதி
ஆசிய போட்டிகள் 2018: லியாண்டர் பயஸ் விலகல்!
ஆசிய போட்டிகள் 2018: லியாண்டர் பயஸ் விலகல்!
ஆசிய விளையாட்டு போட்டியில் லியாண்டர் பயஸ் பங்கேற்பதில் குழப்பம்!
ஆசிய விளையாட்டு போட்டியில் லியாண்டர் பயஸ் பங்கேற்பதில் குழப்பம்!
Advertisement