ஆசிய போட்டிகள் 2018: ஹாங்காங்கைப் புரட்டி எடுத்த இந்திய ஹாக்கி அணி

Updated: 22 August 2018 20:00 IST

ஆசிய போட்டிகளில் இந்திய அணியின் மிகப் பெரும் வெற்றி

Asian Games 2018: India Beat Hong Kong 26-0 In Record Hockey Win

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடந்த ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ஹாங்காங்கை 26 -0 என்ற கணக்கில் தோற்கடித்து இமாலய வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய அணி பெற்ற வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றி ஆகும். 1932 ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவை 24 - 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததே இதுவரை இந்திய அணி பெற்ற வெற்றிகளில் பெரியதாக இருந்து வந்தது. இன்று அந்த 86 வருட சாதனையை இந்திய அணி முறியடிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் ஒரு கோலை இந்திய அணி போட, ஹாங்காங் வீரர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அவர்களால் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்கமுடியாமல் போனது.

ஆட்டம் முடிய ஏழு நிமிடங்கள் இருந்தபோது இந்திய கோல்கீப்பர் கிருஷ்ணன் பகதுர் பதக் கோல்போஸ்டில் இருந்து முன்னேறி ஹாங்காங் பக்கம் சென்று மற்ற வீரர்களுடன் முற்றுகையிடும் அளவுக்கு இப்போட்டியில் எட்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

சென்ற போட்டியில் இந்தோனேசியாவை 17 - 0 என்ற கணக்கில் தோற்கடித்ததே ஆசிய போட்டிகளில் இந்தியாவின் பெரிய வெற்றியாக இருந்தது. அந்தச் சாதனையை இன்றைய ஆட்டத்தின் மூன்றாம் கால்பகுதியிலேயே 18வது கோலை அடித்து இந்திய வீரர்கள் முறியடித்தனர்.

எனினும் நடப்பு சாம்பியன்களான இந்திய அணியினர் தொடர்ந்து பாவம் பார்க்காமல் மேலும் எட்டு கோல்களை அடித்துத் தள்ளினர்.

ரூபிந்தர் பால் சிங் அதிகபட்சமாக ஐந்து கோல்கள் (3', 5', 30', 45', 60') அடித்தார். ஹர்மன்ப்ரீத் சிங் நான்கு கோல்கள் (29', 52', 53', 55'), ஆகாஷ்தீப் சிங் மூன்று (2', 32', 35') மன்ப்ரீத் (3', 17'), லலித் உபாத்யாய் (17', 19'), வருண் குமார் (23', 30') ஆகியோர் இரண்டு கோல்கள் SV சுனில் (7'), விவேக் சாகர் பிரசாத் (14'), மன்தீப் சிங் (21'), அமித் ரோகிதாஸ் (27'), தில்ப்ரீத் சிங் (48'), சிங்லென்சனா கங்குஜாம் S(51'), சிம்ரன்ஜித் சிங் (53'), சுரேந்தர் குமார் (55') ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மொத்தம் 43 கோல்களை அடித்துத் தள்ளியுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றி
  • இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 26-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது
  • இந்திய ஹாக்கி அணி இதுவரை எட்டு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement