ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!

Updated: 31 August 2018 20:15 IST

பரபரப்பாக நடைப்பெற்ற இந்த போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியுற்றது. போட்டியின் தொடக்கம் முதலே ஜப்பான் அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

2018 Asian Games Women
© Hockey India

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 13வது நாளான இன்று, பெண்களுக்கான ஹாக்கி இறுதி போட்டி நடைப்பெற்றது

இந்த போட்டியில் இந்தியா - ஜப்பான் ஆகிய அணிகள் மோதின. பரபரப்பாக நடைப்பெற்ற இந்த போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியுற்றது. போட்டியின் தொடக்கம் முதலே ஜப்பான் அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். போட்டி தொடங்கி, 10:35 நிமிடங்களில் ஜப்பானின் மினாமி சும்சூ முதல் கோல் அடித்தார்

அதனை தொடர்ந்து, போட்டியின் இரண்டாம் காலிறுதியில் இந்தியாவின் நேஹா கோயல் கோல் அடித்தார். இதன் மூலம் 1-1 என்று இரு அணிகளும் சம நிலையில் இருந்தன

போட்டியின் மூன்றால் காலிறுதியின் போது கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, ஜப்பானின் கவமுரா மொடொமி இரண்டாவது கோல் அடித்தார். அதன் பின்னர், ஜப்பான் அணியினரின் சிறப்பான தடுப்பாட்டத்தால், இந்திய அணியினரால் இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை

போட்டியின் முழு நேர முடிவில், 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் கைப்பற்றியது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

இதன் மூலம், 13 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 65 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளின் தற்போதைய நிலவரப்படி, இந்தியா பதக்க பட்டியலில் 8வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை
ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதியில் இந்திய அணி
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதியில் இந்திய அணி
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இங்கிலாந்தை 1-1 என சமன் செய்த இந்தியா
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இங்கிலாந்தை 1-1 என சமன் செய்த இந்தியா
Advertisement