பரபரப்பான இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி டிராவில் முடிவு

Updated: 26 September 2018 10:02 IST

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது

Asia Cup Match Between India And Afghanistan Ends In A Tie
பரபரப்பான இறுதி கட்டத்தை அடைந்த போட்டி, எதிர்ப்பாராத விதத்தில் டிராவில் முடிந்தது © AFP

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுப் போட்டிகளில் விளையாடி வருகின்றன

இந்நிலையில், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைப்பெற்ற இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 போட்டி டிராவில் முடிந்துள்ளது

நேற்றைய போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி களம் இறங்கியது. இதன் மூலம், இந்திய அணி கேப்டனாக தனது 200வது போட்டியை தோனி நிறைவு செய்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய முகமது ஷாசாத் (124) சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்திய அணியின் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் (60), ராயுடு (57) ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். எனினும், தோனி (8), மனிஷ் பாண்டே(8), கேதர் ஜாதவ் (19) ஆகியோர் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி ரன் சேர்க்க திணறியது.

பரபரப்பான இறுதி கட்டத்தை அடைந்த இரண்டாவது இன்னிங்ஸில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 49.5 புள்ளி ஓவர்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. இதனால், எதிர்ப்பாராத விதத்தில் போட்டி டிராவில் முடிந்தது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நியூசிலாந்து டெஸ்ட்டில் இடம்பெறுவாரா இஷாந்த் ஷர்மா?
நியூசிலாந்து டெஸ்ட்டில் இடம்பெறுவாரா இஷாந்த் ஷர்மா?
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து தவான் விலகல்!
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து தவான் விலகல்!
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு 'ஸ்னீக் பீக்' வீடியோவை பகிர்ந்த சாக்ஷி!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
Advertisement