ஷிக்கர் தவானின் அந்த சாதனை என்ன தெரியுமா?

Updated: 22 September 2018 20:13 IST

ஆசிய கோப்பை போட்டிகளில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ஷிக்கர் தவான் முதல் இடத்தில் உள்ளார்.

Asia Cup 2018: Shikhar Dhawan Joins Illustrious List With This Unique Record
2018 ஆசிய கோப்பையில், 213 ரன்களுடன், 96.38 சராசரி பெற்றுள்ளார் ஷிக்கர் தவான். © AFP

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இதுவரை நடைப்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகளில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ஷிக்கர் தவான் முதல் இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமின்றி, ஒரே இன்னிங்ஸில் 4 கேட்சுகள் பிடித்து சிக்கர் தவான் சாதனை புரிந்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நஸ்முல் ஹுசெயின், ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹாசன், முஸ்தாஃபிசுர் ரஹமான் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்ற கேட்ச் பிடித்துள்ளார். ஒரே இன்னிங்ஸில் 4 கேட்சுகள் பிடித்த 7வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷிக்கர் தவான் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டு, இதுவரை நடைப்பெற்றுள்ள ஆசிய கோப்பை போட்டிகளில், 213 ரன்களுடன், 96.38 சராசரி பெற்றுள்ளார் ஷிக்கர் தவான்.

2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைப்பெற்றுள்ள 3 போட்டிகளில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. அடுத்து நடக்க இருக்கும் சூப்பர் 4 சுற்று போட்டியில், பாகிஸ்தான் அணியை எதிர்க்கொள்ள உள்ளது.
 
Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
"தவானுக்கு ரிஷப் பன்ட் சிறந்த மாற்றாக இருப்பார்" - கெவின் பீட்டர்சன்
"தவானுக்கு ரிஷப் பன்ட் சிறந்த மாற்றாக இருப்பார்" - கெவின் பீட்டர்சன்
உலகக் கோப்பையிலிருந்து தவான் விலகல் - இந்திய அணிக்கு பின்னடைவு!
உலகக் கோப்பையிலிருந்து தவான் விலகல் - இந்திய அணிக்கு பின்னடைவு!
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
உலகக் கோப்பை 2019: 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது #LiveScore
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது #LiveScore
Advertisement