பாக்., - ஆஸி., கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்; ஏன் தெரியுமா?

Updated: 28 September 2018 14:08 IST

சில தினங்களுக்கு முன்னர், "உலகின் நம்பர் 1 ஃபீல்டிங் அணி பாகிஸ்தான்" என்று டீன் ஜோன்ஸ் கூறிய கருத்து வைரலானது

Pakistan Fan Asks Dean Jones To "Shut Up", Australian Has A Hilarious Reply
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் © AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போது, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ், பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக பேசி வருவதை காண முடியும். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், "உலகின் நம்பர் 1 ஃபீல்டிங் அணி பாகிஸ்தான்" என்று டீன் ஜோன்ஸ் கூறிய கருத்து வைரலானது

அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், "வாய்ப்பு கிடைத்தால், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேர்பீர்களா?" என்ற ட்விட்டர் கேள்விக்கு, "இல்லை" என்று டீன் ஜோன்ஸ் பதிலளித்துள்ளார்

மேலும், பாகிஸ்ஆன் அணி விளையாடும் போட்டிகளில், டீன் ஜோன்ஸ் சரியான கருத்துக்களை பகிர்வதில்லை என்பதால், "ஷட் அப்! கிரிக்கெட் வர்ணனையின் போது பாரபட்சமாக இருப்பதை நிறுத்தவும்" என்று மற்றொரு பாகிஸ்தான் ரசிகர் டீன் ஜோன்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. ஒரு தரப்பு ரசிகர்கள் டீன் ஜோன்ஸ் பாரபட்சம் காட்டுவதில்லை எனவும், மற்றொரு தரப்பினர், பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளில் அவர் ஒரு சார்புடைய கருத்துக்களை தெரிவிக்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்

டீன் ஜோன்ஸிற்கு எதிரான கருத்துக்களால் ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்த்யில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
"அஷ்வின் செய்ததை, ஸ்டோக்ஸ் விராட் கோலிக்கு செய்தால் ஏற்பீர்களா?" - வார்னே
"அஷ்வின் செய்ததை, ஸ்டோக்ஸ் விராட் கோலிக்கு செய்தால் ஏற்பீர்களா?" - வார்னே
பாக்., - ஆஸி., கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்; ஏன் தெரியுமா?
பாக்., - ஆஸி., கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்; ஏன் தெரியுமா?
Advertisement