‘நிறைய இந்தியா-பாக்., போட்டிகள் இருக்க வேண்டும்!’- சோயப் மாலிக் விருப்பம்

Updated: 10 September 2018 14:34 IST

2019 உலக கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளுக்கு குட்-பை சொல்ல உள்ளார் மாலிக். அதே நேரத்தில் டி20 போட்டிகளில் 2020 ஆண்டு வரை விளையாட உள்ளார்

Asia Cup 2018: Shoaib Malik Bats For More India vs Pakistan Matches
பந்தை விரட்டும் மாலிக் © AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிறைய கிரிக்கெட் போட்டிகள் இருக்க வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

வரும் 15 ஆம் தேதி ஆரம்பமாகிறது ஆசிய கிரிக்கெட் கோப்பை 2018. அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் இந்தக் கோப்பைக்கான ஒருநாள் போட்டிகள் நடைபெறும். ஆசிய கோப்பை தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாட உள்ளன.

இந்நிலையில் மாலிக், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால், அது இரு நாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, மொத்த உலகுக்கே உற்சாகத்தை ஏற்படுத்தும். அப்படி போட்டிகள் நடப்பதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் இன்னும் நெருக்கமாக வர வாய்ப்புள்ளது. இரு நாட்டு அணியிலும் இருக்கும் வீரர்கள் திறமையானவர்கள். அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த நினைப்பார்கள். ஆனால் களத்துக்கு வெளியே நாங்கள் நல்ல நண்பர்கள்’ என்று உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் 2019 உலக கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளுக்கு குட்-பை சொல்ல உள்ளார் மாலிக். அதே நேரத்தில் டி20 போட்டிகளில் 2020 ஆண்டு வரை விளையாட உள்ளார்.

கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பின்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
முதுகுவலி காரணமாக ஆஸி தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்!
முதுகுவலி காரணமாக ஆஸி தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்!
இந்திய தொடருக்காக‌ அதிரடி ஷாட் ஆடி, பயிற்சி பெறும் மேக்ஸ்வெல்!
இந்திய தொடருக்காக‌ அதிரடி ஷாட் ஆடி, பயிற்சி பெறும் மேக்ஸ்வெல்!
இங்கிலாந்தின் உலகக் கோப்பை அணிக்கு இந்த வீரர் பலம் சேர்ப்பார்: நாஸர் ஹுசைன்
இங்கிலாந்தின் உலகக் கோப்பை அணிக்கு இந்த வீரர் பலம் சேர்ப்பார்: நாஸர் ஹுசைன்
ஐசிசி தரவரிசை: மீண்டும் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து!
ஐசிசி தரவரிசை: மீண்டும் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து!
"புல்வாமா தாக்குதல்: திட்டமிட்டபடி இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும்" - ஐசிசி சிஇஓ
"புல்வாமா தாக்குதல்: திட்டமிட்டபடி இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும்" - ஐசிசி சிஇஓ
Advertisement