இந்திய ரசிகர்கள் ‘ஜிஜூ’ என்றழைக்கும் அந்த பாகிஸ்தான் வீரர் யார் தெரியுமா?!

Updated: 24 September 2018 14:42 IST

அடுத்து நடக்க இருக்கும் சூப்பர் 4 சுற்று போட்டிகளில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளும், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதுகின்றன

India vs Pakistan: Indian Fans Call Shoaib Malik "Jiju", Pakistan All-Rounder Acknowledges
இந்திய ரசிகர்கள், ஷோயப் மாலிக்கை ‘ஜிஜூ’ என்று செல்லமாக அழைத்துள்ளனர் © Twitter

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. நேற்று நடைப்பெற்ற இந்த போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து, களம் இறங்கிய அணி, 39.3 புள்ளி ஓவர்களில், 1 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸின் போது, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷோயப் மாலிக் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் அவரை ‘ஜிஜூ’ என்று செல்லமாக அழைத்துள்ளனர். மைதானத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த மாலிக், ரசிகர்களைப் பார்த்து கை அசைத்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது

அடுத்து நடக்க இருக்கும் சூப்பர் 4 சுற்று போட்டிகளில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளும், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதுகின்றன

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
கனடா ஜி20 போட்டி: கண்ணாடி ஜன்னல்கள் உடைய சிக்ஸர் அடித்த சோயிப் மாலிக்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
“எனது ரசிகர்களே…”- ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஷோயப் மாலிக் உருக்கமான மெஸேஜ்!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
மோசமான ஹிட் விக்கெட்டுக்காக கேலி செய்யப்பட்ட சோயிப் மாலிக்
மோசமான ஹிட் விக்கெட்டுக்காக கேலி செய்யப்பட்ட சோயிப் மாலிக்
2019 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸ் தான் கேப்டன் - பிசிபி
2019 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸ் தான் கேப்டன் - பிசிபி
Advertisement