நண்பேண்டா! இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நட்பு பாலம்!

Updated: 27 September 2018 16:16 IST

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன

Asia Cup 2018: India-Pakistan Superfan Friends Prove Cricket
2011 உலக கோப்பை போட்டியில், இரு நாட்டு ரசிகர்களும் முதலில் சந்தித்துள்ளனர் © AFP

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். மிக முக்கியமான போட்டியாக கருதப்படும். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகரின் பயண செலவை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஸ்பான்சர் செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியா விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டியிலும் மூவர்ண கொடியை உடல் முழுவதும் பூசி கொண்டு, ‘மிஸ் யூ சச்சின்’ என்ற வாசகத்துடன் மைதானத்தில் வலம் வந்து பிரபலமானவர் சுதிர் குமார் சௌத்ரி. சச்சின் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகளில், இவருக்கான டிக்கெட்டுகள் ஸ்பான்சர் செய்யப்பட்டு வந்தது.

துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியை காண போதுமான பணம் இல்லாததாலும், ஸ்பான்சர் கிடைக்காததாலும், சுதிர் குமார் துபாய் செல்ல முடியாமல் இருந்தது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரான பஷீர் என்பவர் ஆசிய கோப்பைக்கு வருவது பற்றி சுதிரிடம் விசாரித்துள்ளார். அப்போது, சுதிர் தனக்கு ஸ்பான்சர் கிடைக்காதது பற்றி தெரிவித்துள்ளார். இதை அறிந்த பஷீர், உடனடியாக சுதிருக்கு டிக்கெட் செலவு மற்றும் தங்கும் செலவை ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, ஆசிய கோப்பை போட்டிகளை காண சுதிர் துபாய் சென்றுள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை ஆர்வமுடன் பார்க்கும் இரு நாட்டு ரசிகர்களும், ஒற்றுமையாக இருந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"லவ் யூ பிரதர்" - தீபக் சஹாரின் சகோதரி இதயப்பூர்வமான செய்தியுடன் எழுதிய கடிதம்!
"லவ் யூ பிரதர்" - தீபக் சஹாரின் சகோதரி இதயப்பூர்வமான செய்தியுடன் எழுதிய கடிதம்!
நடுவரின் நோபால் முடிவை மாற்ற வற்புறுத்திய கீரோன் பொல்லார்ட்!
நடுவரின் நோபால் முடிவை மாற்ற வற்புறுத்திய கீரோன் பொல்லார்ட்!
"யார் திறமையானவர்கள் என்று இந்தியா நிரூபித்தது" - சோயிப் அக்தர்
"யார் திறமையானவர்கள் என்று இந்தியா நிரூபித்தது" - சோயிப் அக்தர்
Advertisement