ஆசிய கோப்பை: வங்கதேசத்தைப் பந்தாடிய இந்தியா!

Updated: 22 September 2018 10:58 IST

இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன ரோகித் ஷர்மா வென்று பவுலிங் செய்யத் தீர்மானித்தார்

Rohit Sharma, Ravindra Jadeja Fire India To Emphatic Win Over Bangladesh In Asia Cup
சூப்பர் 4-ன் முதல் போட்டியில் வங்கதேசத்தை இந்தியா சுலபமாக வீழ்த்தியது © AFP

ஆசிய கோப்பையின் ‘சூப்பர் 4’ சுற்றின் முதல் போட்டியில் இந்தியா - வங்க தேச அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் இந்தியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்க தேசத்தைத் தோற்கடித்தது. 

இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன ரோகித் ஷர்மா வென்று பவுலிங் செய்யத் தீர்மானித்தார். இதையடுத்து பேட்டிங் ஆட களமிறங்கியது வங்க தேசம். அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

தொடக்க வீரர்கள் லிதான் தாஸ் மற்றும் நஸ்முல் ஹுசைன் ஷாந்தோ ஆகியோர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர். இதையடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரன் எடுக்கவில்லை. மெஹ்தி ஹாசன் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். இதனால் வங்க தேசம் 49.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் தவான் அதிரடி ஆட்டம் ஆடினர். தவான் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரோகித் கடைசி வரை அவுட் ஆகாமல் 83 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

அடுத்தடுத்து வந்த ராயுடு மற்றும் தோனி முறையே 13 மற்றும் 33 ரன்கள் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் 1 ரன் எடுத்த போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்தியா கடந்தது. 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 36.2 ஓவரிலேயே இலக்கை கடந்தது இந்தியா. 

Comments
ஹைலைட்ஸ்
  • சூப்பர் 4 சுற்றில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது
  • இப்போட்டியில், ரோகித் ஷர்மா அரைசதம் அடித்தார்
  • ஜடேஜா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
தொடர்புடைய கட்டுரைகள்
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் விலகல்! அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்!
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் விலகல்! அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
பாகிஸ்தானுக்கு ஃபிட்னெஸ் அட்வைஸ் தந்த குத்துசண்டை வீரர் அமீர்கான்
பாகிஸ்தானுக்கு ஃபிட்னெஸ் அட்வைஸ் தந்த குத்துசண்டை வீரர் அமீர்கான்
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்
"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்
Advertisement