"இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது" - பாகிஸ்தான் கேப்டன்

Updated: 12 September 2018 23:15 IST

ஆறு முறை ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது

Asia Cup 2018: Champions Trophy Win In The Past, Sarfraz Ahmed Now Focussed On Momentum Ahead Of Next India Clash
இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன © AFP

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி  வருகிற 15 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி தனது முதலாவது லீக் போட்டியில் ஹாங்காங் அணியுடன் மோத உள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது லீக் போட்டியில் இந்தியாவுடன் மோத உள்ளது இது குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமது, “இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்க உள்ளோம். அதே வேகத்தில் இந்தியாவை எதிர்கொள்வோம். இதற்காக முழு அளவில் தயாராகி உள்ளோம்” என்றார்

மேலும், “இதற்கு முன்பு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் அந்த போட்டி நடைப்பெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. எனவே அந்தப் போட்டி பற்றி அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. . கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் களத்தில் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை, ஆறு முறை ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடைப்பெற இருக்கும் ஆசிய போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையின் கீழ் இந்திய அணி களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்யும் ஜடேஜா” - ட்விட்டரில் பாராட்டு மழை
“மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்யும் ஜடேஜா” - ட்விட்டரில் பாராட்டு மழை
த்ரில்லிங் வெற்றி! கடைசி பந்தில் ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி
த்ரில்லிங் வெற்றி! கடைசி பந்தில் ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி
இந்தியா - வங்கதேசம் இறுதி போட்டி: கேப்டன் மொர்டசா சொல்வது என்ன?
இந்தியா - வங்கதேசம் இறுதி போட்டி: கேப்டன் மொர்டசா சொல்வது என்ன?
பாக்., - ஆஸி., கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்; ஏன் தெரியுமா?
பாக்., - ஆஸி., கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்; ஏன் தெரியுமா?
நண்பேண்டா! இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நட்பு பாலம்!
நண்பேண்டா! இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நட்பு பாலம்!
Advertisement