இந்தியா - வங்கதேசம் இறுதி போட்டி: கேப்டன் மொர்டசா சொல்வது என்ன?

Updated: 28 September 2018 13:58 IST

இன்று மாலை 5 மணிக்கு, இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதி போட்டி தொடங்க உள்ளது.

Asia Cup 2018: Mashrafe Mortaza Wants Bangladesh To Keep Emotions In Check Against India
வங்கதேச அணி கேப்டன் மொர்டசா © AFP

ஆசிய கோப்பை தொடர் இறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைப்பெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. முக்கியமான இந்த போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக வங்கதேச அணி கேப்டன் மொர்டசா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கேப்டன் மொர்டசா, “பல கடினமாக நிலைகளை தாண்டி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளோம். போட்டியின் கடைசி நிமிடம் வரை வெற்றி பெற போராட வேண்டும் என்பதை வங்கதேச அணி வீரர்கள் உணர்ந்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்களான தமீம் இக்பால், சாகிப் அல் ஹசன் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் உள்ளனர். இது வங்கதேச அணிக்கு பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.

மேலும், “போட்டியின் போது உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டியது அவசியம். இந்திய அணிக்கு எதிரான இறுதி போட்டி எங்களுக்கு முக்கியமானது. சிறந்த அணியை எதிர்த்து விளையாட உள்ளோம் என்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.

இன்று மாலை 5 மணிக்கு, இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதி போட்டி தொடங்க உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்யும் ஜடேஜா” - ட்விட்டரில் பாராட்டு மழை
“மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்யும் ஜடேஜா” - ட்விட்டரில் பாராட்டு மழை
த்ரில்லிங் வெற்றி! கடைசி பந்தில் ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி
த்ரில்லிங் வெற்றி! கடைசி பந்தில் ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி
இந்தியா - வங்கதேசம் இறுதி போட்டி: கேப்டன் மொர்டசா சொல்வது என்ன?
இந்தியா - வங்கதேசம் இறுதி போட்டி: கேப்டன் மொர்டசா சொல்வது என்ன?
Advertisement