பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம்! இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதல்

Updated: 27 September 2018 12:30 IST

37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது

Gritty Bangladesh Stun Pakistan To Set Up Asia Cup Final Date With India
37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது © AFP

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. அதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 4’ போட்டியில், வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதின

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் குவித்தன. அதிரடியாக விளையாடிய முஷ்ஃபிகுர் ரஹிம், 99 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஜூனைத் கான், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இமாம்-உல்-ஹக் 83 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். எனினும், அடுத்து களம் இறங்கிய சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், வெற்றி இலக்கை அடைய பாகிஸ்தான் அணி திணறியது. 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வங்கதேசம் அணி,

இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடக்க இருக்கும் ஆசிய கோப்பை இறுதி போட்டியில், இந்திய அணியை வங்கதேச அணி எதிர்க்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பங்களாதேஷ் vs இலங்கை: பரிசு பெற்ற பைக்கிலிருந்து கீழே விழுந்த வீரர்
பங்களாதேஷ் vs இலங்கை: பரிசு பெற்ற பைக்கிலிருந்து கீழே விழுந்த வீரர்
பங்களாதேஷ் அணிக்கு புது பந்துவீச்சு பயிற்சியாளர்கள் நியமனம்...!
பங்களாதேஷ் அணிக்கு புது பந்துவீச்சு பயிற்சியாளர்கள் நியமனம்...!
'என் டைம் முடிஞ்சி போச்சு' - 15 ஆண்டுகால கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த மலிங்கா!
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
பங்களாதேஷுடனான முதல் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுகிறார் மலிங்கா!
பங்களாதேஷுடனான முதல் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுகிறார் மலிங்கா!
Advertisement