ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான்! வெல்லப்போவது யாரு?

Updated: 19 September 2018 14:56 IST

இன்று நடக்க இருக்கும் போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன

India vs Pakistan, Head To Head: Advantage India In Matches With Arch-Rivals
இந்தியா - பாகிஸ்தான் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைப்பெற உள்ளது © AFP

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இன்று நடக்க இருக்கும் போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது

2018 ஆசிய கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியை இன்று எதிர்க்கொள்கிறது. இதற்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியதில், கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான்

இதுவரை ஆசிய கோப்பை போட்டிகளில் 12 முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. அதில் 6 போட்டிகளில் (5 ஒருநாள், 1 டி20) இந்திய அணியும், 5 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு முறை போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது

1983/84 - ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய (188/4) அணி பாகிஸ்தானை (134/ஆல் அவுட்) வீழ்த்தியது. 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி

1988/89 - இந்த தொடரில், இந்திய அணி (143/6) பாகிஸ்தானை (142 ஆல் அவுட்) வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது

2008 - க்ரூப் பி பிரிவில் இடம் பிடித்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தகுதி சுற்று போட்டியில் மோதின. அதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இறுதி போட்டியில், இந்தியா - இலங்கை மோதின. அதில், 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது

2010 - இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது, பின்பு இலங்கைக்கு எதிராக நடைப்பெற்ற இறுதி போட்டியில், 81 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது

2011/12 - இந்த தொடரில், 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது. இறுதி போட்டியில், பாகிஸ்தான் - வங்கதேசம் மோதியதில், 2 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில்லிங் வெற்றி பெற்றது

2016 - இந்த தொடர், டி20 முறையில் விளையாடப்பட்டது. இதில், இந்திய அணி (85/5) பாகிஸ்தான் (83/ஆல் அவுட்) அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது

பாகிஸ்தான் வெற்றிகள்

1994/95 - இந்த தொடரில், 97 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. எனினும், இறுதி போட்டியில், இலங்கைக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது

2000 – 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. இறுதி போட்டியில், 39 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கைகை தோற்கடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது

2004 - 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்தியா - இலங்கை மோதிய இறுதி போட்டியில், 25 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கைகை வெற்றி பெற்றது

2008 - சூப்பர் 4 சுற்றில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது.

2013/14 - 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. இறுதி போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது

டிரா

1977 ஆம் ஆண்டு, இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது கனமழை பெய்ததால் போட்டி தடை செய்யப்பட்டது. இதனால், போட்டி டிராவில் முடிந்தது

11 முறை ஆசிய கோப்பை தொடர் நடைப்பெற்றுள்ளது. இதில், (198/84, 1988/89, 1990/91, 1994/95, 2010, 2016) ஆகிய 6 முறை இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு வெற்றி பெற்று 7வது முறையாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் விலகல்! அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்!
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் விலகல்! அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
பாகிஸ்தானுக்கு ஃபிட்னெஸ் அட்வைஸ் தந்த குத்துசண்டை வீரர் அமீர்கான்
பாகிஸ்தானுக்கு ஃபிட்னெஸ் அட்வைஸ் தந்த குத்துசண்டை வீரர் அமீர்கான்
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்
"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்
Advertisement