ஆசிய கோப்பை: இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கானிஸ்தான்!

Updated: 18 September 2018 10:23 IST

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது ஆப்கானிஸ்தான்.

Highlights, Sri Lanka vs Afghanistan Asia Cup 3rd ODI Updates: Afghanistan Beat Listless Sri Lanka By 91 Runs
இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் © AFP

ஆசிய கோப்பையின் 3வது போட்டி நேற்று, அபுதாபியின் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற ஆப்கானிஸ்தான், பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. 

தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆப்கான், தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் முகமது ஷசாத் மற்றும் இசானுல்லா ஜனாத் முறையே 34 மற்றும் 45 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷா, 72 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தார். பின்னர் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷாஹிதி 37 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த ஆப்கான், 249 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்த இலங்கை அணியில் ஒருவர் கூட நிலைத்து ஆடவில்லை. உபுல் தராங்கா எடுத்த 36 தான் அந்த அணி பேட்ஸ்மேன்கள் எடுத்ததிலேயே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதனால், 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை. ஆப்கானிஸ்தான் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மான், நயீப், நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இந்த தோல்வியினால் இலங்கை, ஆசிய கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் முதல் நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் முதல் நாள் #Scorecard
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் மூன்றாவது நாள்! #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் மூன்றாவது நாள்! #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் முதல் நாள் முடிவில் இந்தியா 273/3
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 2வது டெஸ்ட் முதல் நாள் முடிவில் இந்தியா 273/3
Advertisement