ஆசிய கோப்பை 2018: ரோஹித் சர்மாவுக்கு பேட்டிங் டிப்ஸ் அளித்தது இவரா?
பிற மொழிக்கு | READ IN

Updated: 12 September 2018 17:03 IST

ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்க உள்ளது

Asia Cup 2018: Rohit Sharma Gets Batting Advice From Yuzvendra Chahal
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில், ரோஹித் ஷர்மா, சஹால் இடம் பெறவில்லை. © AFP

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைப்பெற உள்ளன. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் க்ரூப் ‘ஏ’வில் இடம் பிடித்துள்ளன. இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் க்ரூப் ‘பி’யில் இடம் பிடித்துள்ளன

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்க உள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Kit up, pick your bat and focus on the next mission. #AsiaCup

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

இதுவரையில், 6 முறை இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைப்பெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், ரோஹித் ஷர்மா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் இடம் பெறவில்லை.

தற்போது, ஆசிய கோப்பையில் பங்கு பெறும் 16 பேர் கொண்ட இந்திய அணியில் இருவரும் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்க உள்ளது. அதற்கான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட ரோஹித் சர்மாவிற்கு, டிப்ஸ் கொடுத்துள்ளார் சஹால். மேலும் இன்ஸ்டாகிராம் பதிவிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
‘சூப்பர் 4’ சுற்றில், மூன்றாவது வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா அணி?
‘சூப்பர் 4’ சுற்றில், மூன்றாவது வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா அணி?
இந்திய ரசிகர்கள் ‘ஜிஜூ’ என்றழைக்கும் அந்த பாகிஸ்தான் வீரர் யார் தெரியுமா?!
இந்திய ரசிகர்கள் ‘ஜிஜூ’ என்றழைக்கும் அந்த பாகிஸ்தான் வீரர் யார் தெரியுமா?!
காண்க: ட்விட்டரில் வைரலான ‘தோனி ரிவ்யூ சிஸ்டம்’!
காண்க: ட்விட்டரில் வைரலான ‘தோனி ரிவ்யூ சிஸ்டம்’!
இந்தியா vs பாக்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இந்தியா vs பாக்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இந்தியா vs பாக்: ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி வெற்றிப் பெறுமா?
இந்தியா vs பாக்: ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி வெற்றிப் பெறுமா?
Advertisement