ஆசிய கோப்பை 2018: ரோஹித் சர்மாவுக்கு பேட்டிங் டிப்ஸ் அளித்தது இவரா?

Updated: 12 September 2018 17:03 IST

ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்க உள்ளது

Asia Cup 2018: Rohit Sharma Gets Batting Advice From Yuzvendra Chahal
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில், ரோஹித் ஷர்மா, சஹால் இடம் பெறவில்லை. © AFP

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைப்பெற உள்ளன. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் க்ரூப் ‘ஏ’வில் இடம் பிடித்துள்ளன. இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் க்ரூப் ‘பி’யில் இடம் பிடித்துள்ளன

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்க உள்ளது.

Kit up, pick your bat and focus on the next mission. #AsiaCup

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

இதுவரையில், 6 முறை இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைப்பெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், ரோஹித் ஷர்மா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் இடம் பெறவில்லை.

தற்போது, ஆசிய கோப்பையில் பங்கு பெறும் 16 பேர் கொண்ட இந்திய அணியில் இருவரும் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்க உள்ளது. அதற்கான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட ரோஹித் சர்மாவிற்கு, டிப்ஸ் கொடுத்துள்ளார் சஹால். மேலும் இன்ஸ்டாகிராம் பதிவிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்யும் ஜடேஜா” - ட்விட்டரில் பாராட்டு மழை
“மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்யும் ஜடேஜா” - ட்விட்டரில் பாராட்டு மழை
த்ரில்லிங் வெற்றி! கடைசி பந்தில் ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி
த்ரில்லிங் வெற்றி! கடைசி பந்தில் ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி
இந்தியா - வங்கதேசம் இறுதி போட்டி: கேப்டன் மொர்டசா சொல்வது என்ன?
இந்தியா - வங்கதேசம் இறுதி போட்டி: கேப்டன் மொர்டசா சொல்வது என்ன?
பாக்., - ஆஸி., கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்; ஏன் தெரியுமா?
பாக்., - ஆஸி., கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்; ஏன் தெரியுமா?
நண்பேண்டா! இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நட்பு பாலம்!
நண்பேண்டா! இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நட்பு பாலம்!
Advertisement