ஆசிய கோப்பை கிரிக்கெட்: தோனி டக்-அவுட்! விரக்தியில் ரசிகர்கள்!
பிற மொழிக்கு | READ IN

Updated: 19 September 2018 15:03 IST

போட்டி நடைப்பெற்று கொண்டிருந்த போது, முதல் இரண்டு பந்துகளை எதிர்க்கொண்ட தோனி (MS Dhoni), ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. இதனால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்

Young Fan Reacts In Agony After MS Dhoni Departs For A Duck In Asia Cup Tie Against Hong Kong. Watch
நேற்று நடைப்பெற்ற போட்டியில் தோனி (MS Dhoni ) டக்-அவுட்டாகி வெளியேறினார். © Twitter

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. நேற்று நடைப்பெற்ற போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஹாங்காங் அணியை இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில், முதலில் விளையாடிய இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஹாங்காங் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம், 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும், இந்தியாவின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, நேற்று நடைப்பெற்ற போட்டியில் டக்-அவுட்டாகி வெளியேறினார். இதனால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்

 

போட்டி நடைப்பெற்று கொண்டிருந்த போது, முதல் இரண்டு பந்துகளை எதிர்க்கொண்ட தோனி, ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. இதனால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர், ஹாங்காங்கின் எஹ்சான் கானின் பந்தில், தோனி டக்-அவுட் ஆனதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக, இளம் ரசிகர் ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது

இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத உள்ளது. இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைப்பெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது

 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2012 ஆஸ்திரேலிய தொடரில் தோனியின் தவறான முடிவு: கம்பீர் குற்றச்சாட்டு
2012 ஆஸ்திரேலிய தொடரில் தோனியின் தவறான முடிவு: கம்பீர் குற்றச்சாட்டு
தோனிக்கு நடனம் கற்றுத்தரும் ஸிவா: வைரல் வீடியோ!
தோனிக்கு நடனம் கற்றுத்தரும் ஸிவா: வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் டென்னிஸ் ஆடும் தோனியின் படம்!
இணையத்தில் வைரலாகும் டென்னிஸ் ஆடும் தோனியின் படம்!
தமிழில் வாழ்த்து சொல்லி அசத்திய தோனியின் மகள் ஜிவா - வைரலாகும் வீடியோ
தமிழில் வாழ்த்து சொல்லி அசத்திய தோனியின் மகள் ஜிவா - வைரலாகும் வீடியோ
இணையதளங்களில் வைரலாகும்
இணையதளங்களில் வைரலாகும் ''க்யூட்'' ஸிவா - தோனி வீடியோ!
Advertisement