Ashes வெற்றி: இங்கிலாந்து வீரரை ‘கேலி’ செய்த ஸ்மித்- வரிசைகட்டி வந்த ரசிகர்கள்!

Updated: 10 September 2019 16:13 IST

இதுவரை 3 ஆஷஸ் போட்டியில் விளையாடியுள்ள ஸ்மித், 134.2 சராசரியில் 671 ரன்கள் குவித்துள்ளார்.

"Classless": England Fans Accuse Bespectacled Steve Smith Of Mocking Jack Leach
ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட ஸ்மித், ஆஷஸ் தொடரின் மூலம்தான் டெஸ்ட் அரங்கிற்குக் கம்-பேக் கொடுத்தார்.  © Twitter

இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் ஸ்டீவ் ஸ்மித். பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தைத் தொடர்ந்து, ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட ஸ்மித், ஆஷஸ் தொடரின் மூலம்தான் டெஸ்ட் அரங்கிற்குக் கம்-பேக் கொடுத்தார். 

அவரை இங்கிலாந்து ரசிகர்கள் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வறுத்தெடுத்து வந்தார்கள். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஸ்மித். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளரான ஜாக் லீச்-ஐ கிண்டல் செய்யும் விதமாக ஸ்மித், அவரைப் போன்றே மூக்குக் கண்ணாடி போட்டு கேலி செய்தார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்தான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவே, இங்கிலாந்து ரசிகர்கள், ஸ்மித்தை விமர்சிக்க வரிசைகட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். 

3வது ஆஷஸ் டெஸ்ட்டின்போது, பென் ஸ்டோக்ஸுடன் கடைசி விக்கெட்டில் பார்ட்னர்ஷிப் போட்டார் லீச். மொத்தமாக அந்த பார்டனர்ஷிப் 76 ரன்கள் குவித்திருந்தாலும், லீச் அடித்தது என்னவோ 1 ரன்தான். ஆனால், இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தவர் லீச். அந்த கோபத்தில் கூட ஸ்மித், இப்படி செய்திருக்கலாம் எனப்படுகிறது. 

இங்கிலாந்து ரசிகர்களின் ரியாக்‌ஷன்களில் சில:
 

இதுவரை 3 ஆஷஸ் போட்டியில் விளையாடியுள்ள ஸ்மித், 134.2 சராசரியில் 671 ரன்கள் குவித்துள்ளார். 3வது டெஸ்ட்டை, காயம் காரணமாக விளையாடாமல் மிஸ் செய்தார் ஸ்மித். 

(AFP தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்து ரசிகர்கள், ஸ்மித்தை வறுத்தெடுத்து வருகிறார்கள்
  • ஜாக் லீச்-ஐ ஸ்மித் கிண்டல் செய்தார் எனப்படுகிறது
  • ஆஷஸ் தொடரை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தவர் ஸ்மித்
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Advertisement