உலகக் கோப்பை 2-ம் நாள்: ஆட்டத்தை மாற்றிய ரொனால்டோவின் அந்த கோல்

Updated: 20 February 2019 14:37 IST

நேற்று உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது நாளில் 3 போட்டிகள் நடந்தது

Portugal vs Spain 2018 FIFA World Cup Football Scores Highlights: Ronaldo Hat-Trick Helps Portugal Draw 3-3 Against Spain
© AFP

நேற்று உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பரபரபான நாள். முதல் போட்டியில் உருகுவே அணி எகிப்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. உருகுவேவின் ஜோஸே மெய்னஸ் 90-வது நிமித்தில் கோல் அடித்து, டிராவை நோக்கி சென்ற போட்டியை தங்கள் அணிக்கு சாதகமாக திருப்பினார். 1970-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டி உருகுவே வென்றிருப்பது இதுவே முதல் முறை..

இரண்டாவதாக ஈரான் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில், ஈரான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஈரான் பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்களில், அந்த அணிக்கு கிடைத்த 2-வது வெற்றியாகும்.

மூன்றாவதாக நடந்த அந்த போட்டிக்காகத் தான் உலகமே ஆவலோடு காத்திருந்தது. ஸ்பெயின் மற்றும் நடப்பு ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே பெனால்டி கிக் மூலம் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோல் அடித்தார். பதிலுக்கு ஸ்பெயின் அணியின் டியாகோ கோஸ்டா 24 வது நிமிடத்தில், தனி ஒருவராக போர்ச்சுகலின் தடுப்புக்களை சமாளித்து அற்புதமான கோல் அடித்து ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பைச் சேர்த்தார்.

44-வது நிமிடம் ரொனால்டோ பந்தை கோலுக்கு செலுத்த, போர்ச்சுகலின் கை ஓங்கியது. முதல் பாதி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் முன்னிலையில் இருந்தது. பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது பாதியில், ஸ்பெயினின் டியாகோ கோஸ்டா, மற்றும் நாச்சோஸ் தலா ஓரு கோல் அடிக்க, உச்சிக்கு சென்றது ஸ்பெயின். பின் நீண்ட நேரமாக பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் அணி. எதிர்பாராத விதமாக போர்ச்சுகல் அணிக்கு 88 வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் கிடைத்தது.

பந்தின் முன் நின்று மூச்சை உள்ளே இழுத்து, கவனம் செலுத்துகிறார் ரொனால்டோ. ஆட்டத்தை மீண்டும் தங்கள் பக்கம் திருப்ப இது சரியான சந்தர்ப்பம். எதிரில் அணைக்கட்டி நிற்கும் ஸ்பெயின் வீரர்கள். ரொனால்டோவின் அந்த கிக்குக்காக உலகமே காத்திருந்தது. ரெஃப்ரியின் விசல் சத்தம் கேட்டது. இமைக்கும் நொடிக்குள், ஸ்பெயின் அணியின் தடுப்பத் தாண்டி, 25 யார்டுகள் தொலைவில் உள்ள கோலுக்குள் நேராக பந்து சென்றது. ரொனால்டோவின் கேரியரில் இது ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்த கோல். ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ, தனி ஒருவராக போர்ச்சுகல் அணியை தூக்கி நிறுத்தினார். இந்த 3 கோல்களையும் சேர்த்து போர்ர்சுகலுக்காக 84 கோல்களை அடித்துள்ளார் ரொனால்டோ.

அதன்பிறகு இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் 3-3 3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, போர்ச்சுகலைக் காட்டிலும் ஸ்பெயின் அணியின் விளையாட்டு சிறப்பானதாக இருந்தது. ஆனால், இந்த ஆட்டம் மொத்தத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டார் ரொனால்டோ. இது முழுக்க முழுக்க ரொனால்டோவின் ஷோ.

Comments
ஹைலைட்ஸ்
  • ஹாட்ரிக் கோல் அடித்தார் ரொனால்டோ
  • ஸ்பெயினின் டியாகோ கோஸ்டா 2 கோல்கள் அடித்தார்
  • பரபரப்பான கட்டத்தில் ரொனால்டோ அசர வைக்கும் கோல் அடித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2-ம் நாள்: ஆட்டத்தை மாற்றிய ரொனால்டோவின் அந்த கோல்
உலகக் கோப்பை 2-ம் நாள்: ஆட்டத்தை மாற்றிய ரொனால்டோவின் அந்த கோல்
உலகக் கோப்பை 2018: ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் இன்று மோதல்
உலகக் கோப்பை 2018: ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் இன்று மோதல்
Advertisement