ஃபிபா உலக கோப்பை அரையிறுதி: பிரான்ஸை வீழ்த்தி சாதனை படைக்குமா பெல்ஜியம்?

Updated: 09 July 2018 15:04 IST

பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்யப் போகும் அரையிறுதிப் போட்டி நாளை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்க உள்ளது

FIFA World Cup 2018 Semi-Final, France vs Belgium Preview: Unbeaten Belgium Face France, Eye Maiden World Cup Final Spot
© AFP

பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்யப் போகும் அரையிறுதிப் போட்டி நாளை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடக்க உள்ளது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் தங்களது முழு பலத்தை உபயோகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பிரான்ஸைப் பொறுத்தவரை ஏற்கெனவே இரண்டு முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, ஒரு முறை கோப்பையையும் தட்டியுள்ளது. ஆனால், பெல்ஜியமைப் பொறுத்தவரை இதுவரை அவர்கள் இறுதிப் போட்டிக்கு ஒரு முறை கூட தகுதி பெற்றதில்லை. 

அதனால், பிரான்ஸை விட பெல்ஜியம் இன்னும் மூர்க்கமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காலிறுதிப் போட்டியில் அந்த அணி, பிரேசிலைத் தோற்கடித்ததன் மூலம் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். 

இதுவரை, 73 முறை பெல்ஜியமும் பிரான்ஸும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெல்ஜியம் 30 முறையும், பிரான்ஸ் 24 முறையும், 19 முறை போட்டி டிராவிலும் முடிந்துள்ளன.

கடைசியாக இரண்டு அணிகளும் 1986 உலக கோப்பையில் மோதின. அப்போது, பிரான்ஸ் 4 - 2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை தவிடுபொடியாக்கியது. 

பெல்ஜியம் அணியின் நாசெர் சாத்லி, ‘எங்கள் அணியின் பயிற்சியாளர் ராபர்ட் மார்டினஸ் தான் எங்களின் இந்த வெற்றிப் பயணத்துக்குக் காரணம். பிரேசில் அணியை வீழ்த்திய பிறகு எங்கள் மத்தியில் இருக்கும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பிரேசில் அணியை வீழ்த்தினால், யாரைப் பற்றியும் உங்களுக்கு பயம் இருக்காது. ஆனால், அந்த வெற்றி களிப்பில் மட்டும் நாங்கள் தேங்கிவிட முடியாது. இந்தப் போட்டி குறித்து கவனம் இருக்க வேண்டும். அச்சமில்லாமல் நாங்கள் களத்தில் விளையாடினால், வெற்றி எங்கள் வசமாகும்’ என்றுள்ளார் அரையிறுதி குறித்து நம்பிக்கைத் ததும்ப பேசியுள்ளார்.
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
Advertisement