கால்பந்து உலக கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

Updated: 11 July 2018 09:29 IST

ஃபிபா உலக கோப்பை அரையிறுதிப் போட்டி நேற்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் முழு அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில் தொடங்கியது

FIFA World Cup 2018: Samuel Umtiti Heads France Into Final As Belgium Fall Short
© AFP

ஃபிபா உலக கோப்பை அரையிறுதிப் போட்டி நேற்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் முழு அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில் தொடங்கியது. 

முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற வேட்கையோடு களமிறங்கியது பெல்ஜியம். ஆனால், அதகளமான அணியோடு களம் கண்டது பிரான்ஸ். இரு அணிகளும் ஆட்டம் தொடங்கியது முதலே தங்களது முழு பலத்தையும் உபயோகித்து கோல் அடிக்க முயற்சிகள் எடுத்தன. ஆனால், முதல் பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் போட எடுத்த எந்த முயற்சியும் எடுபடவில்லை. இதனால், இரு அணிகளும் முதல் பாதி முடிவில் 0 - 0 என்ற ரீதியில் இருந்தன.

தொடர்ந்து இரண்டாவது பாதி விறுவிறுப்புடன் தொடங்கியது. பிரான்ஸ் அணிக்கு ஒரு கார்னர் கிக் கிடைத்தது. அந்த கிக்கை அந்த அணியின் உம்திதி ஹெட்டிங் செய்து பிரமாதமான கோலாக மாற்றினார். தொடர்ந்து பிரான்ஸ் கோல் போட பல முயற்சிகள் எடுத்தன. அந்த அணி கடைசி நிமிடம் வரை இந்த அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தது.

ஆனால், பெல்ஜியம் அணி, பிரான்ஸ் அணிக்கு சற்றும் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் போட்டி நேர முடிவில் பிரான்ஸ் 1 கோலுடனும் பெல்ஜியம் கோல் ஏதும் போடாமலும் ஆட்டத்தை முடித்துக் கொண்டன.

இதனால், வரும் 15 ஆம் தேதி நடக்கவுள்ள இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணி, இங்கிலாந்து அல்லது க்ரோஷியாவை எதிர்கொள்ளும். மாஸ்கோவில் நடக்கும் இறுதிப் போட்டியைக் காண ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அரங்கத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • பிரான்ஸ் கோல் கீப்பர் ஹூகோ லோரிஸ் நிறைய கோல்களை தடுத்தார்
  • இரண்டு அணிகளும் முதல் பாதி முடிவில் கோல் ஏதும் அடிக்கவில்லை
  • இரண்டாவது பாதியில் பிரான்ஸ் ஒரு கோல் போட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
Advertisement