புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!

Updated: 16 July 2018 09:43 IST

இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் போது, ஒரு எதிர்பாராத சம்பவம் சிறிது நேரம் மைதானத்தையே கலங்கடித்தது

FIFA World Cup 2018: Russia
© AFP

நேற்று மாஸ்கோவில் 2018 ஃபிபா கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் க்ரோஷியாவை, பிரான்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் போது, ஒரு எதிர்பாராத சம்பவம் சிறிது நேரம் மைதானத்தையே கலங்கடித்தது. 

ரஷ்யாவில் தேர்தல் சமீபத்தில் தான் முடிந்து, விளாதிமிர் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக பல போராட்டங்கள் அந்நாட்டில் நடந்து வருகின்றன. அப்படித் தீவிரமாக போராடி வரும் அமைப்புகளில் ஒன்றுதான் ‘புஸி ரியாட்’. மிகவும் வித்தியாசமான முறையில் போராட்டங்களை அரங்கேற்றி உலக ஊடக கவனத்தைப் பெறுவதில் இந்தக் குழு சாமர்த்தியசாலியாகும்.

நேற்று ஃபிபா 2018 கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கோலகலமாக நடந்தது. உலகின் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தப் போட்டியை நேரலையில் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். இரண்டாவது பாதியின் முடிவின் போது, பிரான்ஸ் 4 கோல்களுடனும், க்ரோஷியா 2 கோல்களுடனும் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்தன.

அப்போது, திடீரென்று போலீஸ் உடையில் இருந்த சிலர் மைதானத்துக்குள் வந்து போராட்டம் நடத்தினர். இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் மைதானத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர். அவர்களை அப்புறப்படுத்திய பிறகு போட்டி மீண்டும் தொடர்ந்தது. இதற்கு யார் காரணம் என்று தெரியாதிருந்த நிலையில், ‘புஸி ரியாட்’ தனது சமூக வலைதள பக்கத்தில், ‘அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்’ என்றொரு பதிவை போராட்டம் முடிந்த பின்னர் வெளியிட்டது. மேலும், ‘நாட்டில் அரசியல் போட்டி இருக்க வேண்டும்’ என்று இன்னொரு பதிவில் தெரிவித்தது. தாங்கள்த தான் மைதானத்தில் நடந்த போராட்டத்துக்குக் காரணம் என்றும் ‘புஸி ரியாட்’ தெரிவித்தது. 

இந்தப் போட்டியை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேரில் கண்டுகளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் கவனத்தை நேரடியாக ஈர்க்கவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
Advertisement