உலக கோப்பை இறுதிப் போட்டி: ரஷ்ய அதிபர் புதின் நேரில் காண உள்ளார்!

Updated: 10 July 2018 12:10 IST

கடந்த 7 ஆம் தேதி க்ரோஷியாவுக்கு எதிராக நடந்த காலிறுதிப் போட்டியில் ரஷ்யா, தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது

FIFA World Cup 2018: Russian President Vladimir Putin To Attend Tournament Final

ஃபிபா உலக கோப்பை இந்த முறை ரஷ்யாவில் கோலகலமாக நடந்து வருகிறது. தொடரின் காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி மட்டும் தான் பாக்கியுள்ளது.

முதல் அரையிறுதிப் போட்டி இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் இடையில் நடைபெற உள்ளது. இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து, க்ரோஷியா அணிகள் நாளை மோத  உள்ளன. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் வரும் 15 ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். 

இந்நிலையில், தொடரின் முதல் போட்டியை நேரில் கண்டுகளித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இறுதிப் போட்டியையுப் பார்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ரஷ்யத் தரப்பு, ‘ரஷ்யா விளையாடிய போட்டிகளில் புதின் நேரில் கலந்து கொள்ளாததால் அவர், நம் அணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அவருக்கு நேரம் கிடைக்காததே காரணம். நேரில் வந்து போட்டிகளை பார்க்க முடியாத போதும் அதிபர், தொடர்ந்து அணியின் பயிற்சியாளரிடம் நடக்கும் சம்பவங்கள் குறித்து தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில், அவர் இறுதிப் போட்டியை கண்டிப்பாக வந்து பார்ப்பார் என்று நம்புகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி க்ரோஷியாவுக்கு எதிராக நடந்த காலிறுதிப் போட்டியில் ரஷ்யா, தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 
 

Comments
ஹைலைட்ஸ்
  • ரஷ்ய அணி காலிறுதி வரை தொடரில் முன்னேறியது
  • வரும் 15 ஆம் தேதி உலக கோப்பை இறுதிப் போட்டி நடக்கும்
  • இன்று பெல்ஜியம் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையில் அரையிறுதி நடக்க உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
Advertisement