ஃபிபா உலக கோப்பை 2018: போர்ச்சுகலின் வெற்றியைப் பறித்த ஈரான்!

Updated: 26 June 2018 10:32 IST

தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், போட்டியின் 90 வது நிமிடத்தில் ஈரானுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைதத்து

FIFA World Cup 2018: Portugal Concede Late Penalty As Uruguay Await In Last 16
© AFP

ஃபிபா உலக கோப்பையின் நேற்றைய லீக் போட்டியில் பி க்ரூப்பில் இருக்கும் போர்ச்சுகலும் ஈரானும் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஐரோப்பிய லீக் சாம்பியன் போர்ச்சுகல் இந்தப் போட்டியில் டிரா அல்லது வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது. அதே நேரத்தில் ஈரான், வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடலாம் என்ற விதி இருந்தது. இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே போர்ச்சுகலின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆட்டம் ஆரம்பமாகி சில நிமிடங்களிலிலேயே போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மயிரிழையில் ஒரு கோலை மிஸ் செய்தார். தொரடர்ந்து போர்ச்சுகலின் கோல்களை ஈரான் கோல் கீப்பர் தடுத்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில், முதல் பாதியின் 45 வது நிமிடத்தில் போர்ச்சுகலின் மோர்டோவியா அரேனா, ஒரு அட்டகாசமான கோலை போட்டார்.

இதையடுத்து இரண்டாவது பாதி தொடங்கியது. கிட்டத்தட்ட போர்ச்சுகலின் காலிறுதிச் சுற்று உறுதியாகிவிட்ட நிலையில், அந்த அணிக்கு ஆட்டத்தின் 53 வது நிமிடத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல ரொனால்டோ பெனால்டி கிக் அடிக்க வந்தார். ஆனால், எதிர்பார்க்காத வகையில் கோலை மிஸ் செய்துவிட்டார்.

தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், போட்டியின் 90 வது நிமிடத்தில் ஈரானுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைதத்து. அது கோலாக மாறியது. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன. போட்டி டிராவில் முடிந்தது.

இந்த டிரா மூலம், போர்ச்சுகல் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. மேலும், வரும் 30 ஆம் தேதி உருகுவே அணியை போர்ச்சுகல் நாக்-அவுட் போட்டியில் சந்திக்க உள்ளது.

உருகுவே, அவர்கள் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • போட்டியில் டிரா செய்ததன் மூலம் போர்ச்சுகல் காலிறுதிக்கு முன்னேறுகிறது
  • இந்தப் போட்டியில் ரொனால்டோ, பெனால்டி கோலை மிஸ் செய்துவிட்டார்
  • போர்ச்சுகல் நாக்-அவுட் போட்டியில் உருகுவே அணியை சந்திக்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
Advertisement