ஃபிபா உலக கோப்பை 2018: ‘லக்கி கோல்’ அடித்த ஸ்பெயின்… போராடி தோற்ற ஈரான்!

Updated: 21 June 2018 09:50 IST

ஃபிபா கால்பந்து உலக கோப்பை லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

FIFA World Cup 2018: Lucky Diego Costa Goal Sees Spain Past Dogged Iran
© AFP

ஃபிபா கால்பந்து உலக கோப்பை லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு உலக கோப்பையில், லீக் போட்டிகளிலேயே பல அதிர்ச்சிகள் இருந்தன. இதனால், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிக் கொண்டிருகின்றன. லீக் போட்டிகள் முடியும் தறுவாயில் இருப்பதால், டாப் 16 அணிக்கான இடத்தைப் பிடிக்க பல நாடுகளுக்கு மத்தியில் போட்டா போட்டி நடந்து வருகின்றது. 

நேற்று, 2010 ஆம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் அணிக்கும், மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையில் லீக் போட்டி நடந்தது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயின், தான் சந்தித்த முதல் போட்டியை டிரா செய்ததால், இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. அதே நேரத்தில், இந்த முறை உலக கோப்பையின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஈரான் அணி களத்தில் இறங்கியது. 

தொடக்கம் முதலே இரண்டு அணிகளுக்கும் கோல் போட வேண்டும் என்ற நோக்கம் இருந்ததால், ஆக்ரோஷமான ஆட்டத்தை கையாண்டன. இதையடுத்து, ஆட்டத்தின் 54 வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டியாகோ கோஸ்டா, உதைத்த பந்து எதிரணியினர் காலில் எதிர்பாராத விதமாக பட்டு ஒரு லக்கி கோலை விழுந்தது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் அணியின் சய்யீத் இசதோலாஹியும் உடனடியாக ஒரு கோல் போட்டார். ஆனால், அது ஆஃப்-சைடு என்று நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டது. ஆதலால், ஈரானுக்கு கோல் கணக்காகவில்லை. தொடர்ந்து இரு அணிகளும் கோல் போட முயன்று கொண்டே இருந்தன. இருந்தும் எந்த முயற்சியும் கோல் ஆக மாறவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில், ஸ்பெயின் அணி 1 கோலுடனும், ஈரான் அணி கோல் ஏதும் போடாமல் போடாமலும் இருந்தன. இதனால், இந்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு முதல் வெற்றி கிட்டியுள்ளது.
 

Comments
ஹைலைட்ஸ்
  • 2010 ஆம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின்
  • ஸ்பெயின், தான் சந்தித்த முதல் போட்டியை டிரா செய்தது
  • இதுவே, ஸ்பெயினின் முதல் வெற்றியாகும்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
Advertisement