உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்

Updated: 18 July 2018 16:22 IST

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டிவி பார்வையாளர்களை ஈர்த்த கால்பந்து தொடர், சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளானது

FIFA World Cup 2018: Kylian Mbappe
© AFP

உலகக்கோப்பை கால்பந்து 2018 தொடரில் பிரான்ஸ் வீரர் கிலியான் மப்பே குரோஷியாவிற்கு எதிராக அடித்த கடைசி கோல் தான் இந்த கால்பந்து தொடரிலேயே அதிகம் குறிப்பிடப்பட்ட ஒன்றாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூலை 15ம் தேதி பிரான்ஸ் - குரோஷியாவிற்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் முடிவடைந்தது. இதில் பிரான்ஸ் அணி குரோஷியாவை 4 -2க்கு என்கிற கோல் கணக்கில் தோற்கடித்தது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டிவி பார்வையாளர்களை ஈர்த்த கால்பந்து தொடர், சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளானது. இந்நிலையில், மொத்த போட்டிகளையும் வைத்து கணக்கிடுகையில், பிரான்ஸ் - குரோஷியா இடையே நடந்த போட்டியில், பிரான்ஸ் அணி வீரர் கிலியான் மப்பே அடித்த 4வது கோல் ட்விட்டரில் பிரசித்தி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து போடப்பட்ட ட்வீட்களிலேயே இந்த கோல் குறித்துதான் பலர் கருத்து தெரிவித்துள்ளனர் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கால்பந்து தொடர்பான ட்விட்கள் 115 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரான்ஸ், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை அடுத்து பிரேசில் அணி குறித்து பலர் ட்விட் செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • பிரான்ஸ் அணியின் இளம் வீரர் கிலியான் மப்பே அடித்த கோல் புகழ் பெற்றுள்ளது.
  • பிரான்ஸ் அணியின் கடைசி கோல் குறித்து அதிக ட்விட் பகிரப்பட்டுள்ளது.
  • இறுதிப்போட்டி பிரான்ஸ் - குரோஷியா அணிகள் இடையே நடைபெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
விளையாட்டு உலகின் புகழ்பெற்ற
விளையாட்டு உலகின் புகழ்பெற்ற 'லாரஸ் விருது';இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் யார்?
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
இணையத்தில் வைரலான நெய்மரின் 27வது பிறந்தநாள்!
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
உலகக்கோப்பை கால்பந்து 2018 : அதிக ட்வீட்களை ஈர்த்த மப்பேவின் கடைசி கோல்
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
Advertisement