2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!

Updated: 16 July 2018 11:04 IST

2018 ஆம் ஆண்டுக்கான ஃபிபா கால்பந்து உலக கோப்பைத் தொடர் முடிவுக்கு வந்துள்ளது

FIFA World Cup 2018: From Diego Maradonas Antics To Neymars Theatrics - Five World Cup Moments
© AFP

2018 ஆம் ஆண்டுக்கான ஃபிபா கால்பந்து உலக கோப்பைத் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. ரஷ்யாவில் நடந்த உலக கோப்பைத் தொடரில் இந்த முறை சாம்பியனாக மகுடம் சூடியது பிரான்ஸ் அணி. க்ரோஷியா நாட்டு கால்பந்து அணியை, 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் மாஸாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

இந்த உலக கோப்பையில் மறக்க முடியாத 5 சம்பவங்கள் இதோ:

மரடோனாவின் இரண்டு விரல் சல்யூட்

டியாகோ மரடோனா, கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர்களின் ஒருவராக என்றென்றும் நினைவுக்கூறப்படுவார். ஆனால், அவர் இந்த முறை அர்ஜென்டினா விளையாடிய போட்டிகளை நேரில் பார்த்த போது செய்த சைகைகள் பலரின் கவனத்தை ஈர்த்தது. அர்ஜென்டினா, நைஜிரியா அணிக்கு எதிராக 2 - 1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று கடைசி 16 சுற்றுக்கு முன்னேறியது. அந்தப் போட்டியின் போது மரடோனா, செய்த ஒரு செயல் பலரை திகைக்க வைத்தது. 

ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கழித்தும் இன்னும் ஊடக வெளிச்சம் படும்படி மரடோனா இருப்பது வியப்பளிக்கிறது தான். ‘அர்ஜென்டினாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் கண்டிப்பாக அணியை ஜொலிக்க வைப்பேன்’ என்று அவர் கூறியுள்ளதும் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஸ்விஸ் ‘டபுள் ஈகல்ஸ்’

ஸ்விட்சர்லாந்துக்கும் செர்பியாவுக்கும் இடையில் நடந்த லீக் போட்டியில், ஸ்விஸ் வீரர்கள் ஷாக்கிரி மற்றும் சாக்கா ஆகியோர் கொண்டாடிய விதமும் கவனத்துக்குரியது. செர்பிய நாட்டில், அல்பேனியன் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், ‘டபுள் ஈகல்’ சைகை ஸ்வீஸ் வீரர்களால் செய்யப்பட்டது. 

ராபி வில்லியம்ஸின் ‘மிடில் ஃபிங்கர்’

இந்தத் தொடரின் முதல் போட்டியில் ரஷ்யா, சவுதி அரேபியாவை 5 - 0 என்ற கோல் கணக்கில் தவிடுபொடியாக்கியது. ஆனால், அன்று இன்னொரு விஷயமும் தலைப்புச் செய்தியானது. பிரிட்டனைச் சேர்ந்த பாடகர் ராபி வில்லியம்ஸ், தொடரின் துவக்க விழாவில் அரங்கேற்றம் நிகழ்த்து வந்திருந்தார். அவர் என்னக் காரணத்துக்காகவோ, ஒரு கேமரா முன்னால் நின்று தனது ‘நடு விலலை’ உயர்த்திக் காண்பித்தார். இன்னுமும் ராபி வில்லியம்ஸின் கோபத்துக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. 

நெய்மரின் ‘சாகசங்கள்’

5 முறை உலக கோப்பையை வென்ற தென் அமெரிக்க நாடான பிரேசில் இந்த முறை காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. ஆனால், முழு திறனையும் வெளிகொணர்ந்த விதத்தில் பிரேசில் சற்றுத் தலை நிமிர்வுடன் தான் சொந்த நாட்டுக்குச் சென்றது. இந்த முறை பிரேசில் கேப்டன் நெய்மர், வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக செய்த சேட்டைகள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கன்டென்டாக மாறியது. 

குறிப்பாக, அவர் எதுவும் நடப்பதற்கு முன்னரே தரையில் படுத்து புரண்டு, பெனால்டி கேட்பதும் ஃபவுல் கேட்பதும் நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டது. அதுவும் இந்த முறை உலக கோப்பையில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.

தலைப்புச் செய்தியான புகைப்படக்காரர்

ஏஎஃப்பி நிறுவனத்தின் புகைப்படக்காரர் யூரி கோர்டஸ், இங்கிலாந்து - க்ரோஷியா இடையில் நடந்த அரையிறுதிப் போட்டியில் தலைப்புச் செய்தியானார். அந்தப் போட்டியின் இறுதியில் க்ரோஷியா, வெற்றி பெறுவதற்கான ஒரு கோலை போட்டவுடன், கோர்டஸ் அந்த அணியின் கொண்டாட்டத்தில் சேரும் அளவிற்கு நெருக்கமாக சென்றுவிட்டார். அப்போது, அவர் எடுத்த ஒரு புகைப்படம் உலக வைரலானது. தொடர்ந்து அவர் புகைப்படங்களை க்ளிக்கிக் கொண்டே நைசாக மைதானத்து வெளியேயும் வந்துவிட்டார். இது ஒரு புகைப்படக்காரர் இக்கட்டான சூழ்நிலையையும் எப்படி சாதுர்யமாக கையாள வேண்டும் என்பதற்கு உதாரணமாக மாறிவிட்டது.
 

Comments
ஹைலைட்ஸ்
  • பிரான்ஸ் உலக சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது
  • இறுதிப் போட்டியில் பிரான்ஸ், க்ரோஷியாவை 4 - 2 என்ற ரீதியில் தோற்கடித்தது
  • மரடோனா, நெய்மர் உள்ளிட்டவர்கள் இந்த முறை வைரல் கன்டென்ட் ஆனார்கள்
தொடர்புடைய கட்டுரைகள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
தாயகம் திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு தந்த ஃபிரான்ஸ் மக்கள்
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
உலக கோப்பை ஃபைனலில் பெய்த மழையும்… புதினிக்கு நீட்டப்பட்ட குடையும்..!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
2018 ஃபிபா உலக கோப்பை: மறக்க முடியாத 5 சம்பவங்கள்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
புதினுக்கு எதிராக போராட்டம்… ஃபிபா இறுதிப் போட்டியை தெறிக்கவிட்ட 4 பேர்!
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
மகுடம் சூடிய பிரான்சு அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
Advertisement